WORD OF GOD

WORD OF GOD

Thursday, December 26, 2013

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


கிறிஸ்துவுக்குள் அன்பான எனதருமை வாசகர்களே, நமது இணைய தள ஊழியத்தின் சார்பாக உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது பத்திரிக்கை ஊழியமும் மீண்டும் துவங்கப்பட்டு சிறப்புடன் இயங்கி வருகிறோம். புத்தகம் வேண்டுவோர் தங்கள் முகவரியை நமது இமெயிலுக்கு அனுப்பவும். புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் நான் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை சமூகத்தில் தேவையில் இருப்பவர்களோடு கொண்டாட வேண்டும் என்று கடந்த ஆண்டு தீர்மானித்தேன் அதன்படி கடந்த வருடம் எச்.ஐ.வி நோயாளிகளுடன் இணைந்து நானும் எனது ஊழிய நண்பர்களும் கொண்டாடினோம், அதே போல் இவ்வாண்டு ஆம்பூரில் உள்ள கிளை சிறையில் முறைப்படி அனுமதி பெற்று நமது அன்பின் பரிசாக பழங்களையும் இனிப்புகளையும் வழங்கினோம்.

இந்த மனித நேயம் மலர வேண்டியதே கிறிஸ்து பிறந்ததின் நோக்கமல்லவா?

வருகிற புது வருடம் மனித நேயம் நிறைந்த ஆண்டாக மலர கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் நாம் உறுதி ஏற்போம் ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews