கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் யாவரையும் மீண்டும்
சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது உண்மை உபவாச கூடுகை இம்மாதமும் சிறப்பாக நடை பெற்றது.
இரண்டு குடும்பங்கள் வந்து நம்மிடம் உதவி பெற்று சென்றார்கள். சகோதரி ….ராணி அவர்கள் தனது கணவருடன்
வந்து பங்கெடுத்தார்கள் இருவரும் எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு
ஒரு குழந்தை இருக்கிறது தற்போது சகோதரி .........ராணி கேன்சர் நோய்க்கான
அறிகுறிகளும் அவர்களுக்கு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருப்பதை சொல்லி
நம்மிடம் அழுதார்கள். அவர்களுக்காக ஊக்கமாக நாம் ஜெபித்தோம், அதேபோல
சகோதரி........... கவி அவர்களும் பங்கெடுத்தார்கள் அவர்களும் எச்.ஐ.வியினால்
பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் இருவருக்கும் நமது காணிக்கையின் வழியாக உதவிகள் செய்யப்பட்டன. இதற்கு நம்மோடு இனைந்து வெளி நாட்டிலிருந்து உதவி செய்த சகோதரி டயானா டெய்சி ராணி - வசந்த் - பிரணவ் அவர்கள்
குடும்பத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெபத்தில் அனேக வாலிபர் சகோதரர்கள் பங்கெடுப்பது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது.
கர்த்தருக்கு நன்றி .