தலைப்பைச் சேருங்கள் |
கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாச உறவுகளே இம்மாதம் 18 ம் தேதி புனித வெள்ளி அன்று நமது இயேசுவின் குரல் மாத இதழ் ஊழியம் வாயிலாக ஒரு மாபெரும் ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். கடந்த ஆண்டு புனித வெள்ளி அன்றும் இதே போல் ஒரு மாபெரும் ரத்த தான முகாம் நடத்தினோம் அப்போது 65 பேர் பங்கு பெற்று ரத்ததானம் செய்தனர் இவ்வாண்டு 100 பேரை எதிர் பார்க்கிறோம். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து மருத்துவக் குழுவினர் வருகின்றனர்.
முழு உலகை காக்க இயேசு இரத்தம் சிந்திய நன்னாளில் ஒருவரை காக்கவேணும் நாமும் இரத்தம் சிந்துவோம்,
நம் இரத்தம் நம் முகம் தெரியாத ஒரு சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு உயிர் கொடுக்கப்போகிறது. இது தானே மெய்யான கிறிஸ்தவ அன்பு?
அதே நாளில் இலவச பல் சிகிச்சை முகாமும், கல்யாணி ஸ்கேன் மற்றும் டென்டல் கிளினிக் மூலமாக நடைபெறுகிறது வாருங்கள் பயன் பெறுங்கள்.
நாள்:18.04.2014 புனித வெள்ளி
இடம்: கன்கார்டியா மேல் நிலை பள்ளி, ஆம்பூர்.
வாருங்கள் கிறிஸ்துவின் அன்பை செயலில்
காட்டுவோம்.
அன்புடன்
Y. கில்பர்ட் ஆசீர்வாதம்
No comments:
Post a Comment