இம்மாதத்தின் உண்மை உபவாச கூடுகை பிப்ரவரி 14 அன்று வெகு சிறப்பாக நடை பெற்றது, நமது காணிக்கையின் பலனை சகோதரி பாரதி அவர்கள் வந்து பெற்று சென்றார்கள், சகோதரி பாரதி கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளோடு போராடி வருகிறார்கள். அதே நேரத்தில் நமது உண்மை உபவாச கூடுகை பெரிய ஆசீர்வாத கூடுகையாக அமைந்தது. காரணம் கடந்த ஜனவரி மாதம் சகோதரி உஷா ராணி என்பவர் தனது கணவரோடு வந்து பங்கெடுத்து நமது உதவியை பெற்று சென்றார்கள். ஆனால் அப்போது அவர் மிகுந்த கண்ணீரோடு நின்றார்கள் காரணம், அவர்களுக்கு கேன்சருக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைக்கு தன்னை வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ மனைக்கு செல்லும்படி தங்கள் ஊர் மருத்துவர் பரிந்துரை செய்திருப்பதையும் நம்மிடம் கூறினார்கள். அதற்கான மருத்துவ சான்றிதழை கையோடு கொண்டு வந்திருந்தார்கள், நாம் அனைவரும் ஒன்றாக அவர்களுக்காக ஜெபித்தோம், பிறகு அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு கடந்து சென்றார்கள், இம்மாத கூடுகைக்கும் வந்திருந்தார்கள், ஜெபத்திற்காக அல்ல சாட்சி சொல்லுவதற்காக. ஆம் கர்த்தர் நம் விண்ணப்பத்தை கேட்டு சகோதரியை கேன்சர் அச்சத்திலிருந்து முற்றிலும் விடுவித்தார். அவர்கள் கூறிய சாட்சியை அப்படியே உங்கள் பார்வைக்கு பதிவேற்றுகிறேன். கர்த்தர் நல்லவர். அவர் நம் மத்தியில் செயலாற்றுகிறவர்.
WORD OF GOD
Saturday, February 21, 2015
Wednesday, February 11, 2015
திரு வசன பரிசு
அன்புக்குரிய உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், நமது ஊழியத்தின் பல் வேறு வடிவங்களை நீங்கள் கண்டு வருவதற்காக, அதற்காக நீங்கள் ஜெபித்து வருவதற்காக உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நமது ஊழியத்தில் தற்போது வேதாகமங்களை பரிசாக கொடுத்து வருகிறோம். நமது ஜெபத்திற்கு உற்சாகமாக வரும் 20 இளைஞர்களுக்கு வேதாகமம் பரிசாக வழங்கினோம்,,. அதேபோல் நமது ஜெபத்தில் வந்து உதவி பெறும் எஸ்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கும் வேதாகமத்தை பரிசளித்து வருகிறோம்.
இதற்காக நமக்கு உதவி செய்து வருபவர். திரு. டேவிட் திலீப் குமார் அவர்கள் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இதற்காக நமக்கு உதவி செய்து வருபவர். திரு. டேவிட் திலீப் குமார் அவர்கள் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
வேத வினா விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எ...
உங்கள் இதயம் தொட்டவை
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
Hi kutties today we will learn the second lesson from the New Testament. Read and share it to your friends. One day the king's messeng...
-
மல்கியா.4 :2 (மலாக்கி.4 :2 ) என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் ...