WORD OF GOD

WORD OF GOD

Saturday, February 21, 2015

உண்மை உபவாச கூடுகை.- பிப்ரவரி 14

இம்மாதத்தின் உண்மை உபவாச கூடுகை   பிப்ரவரி 14 அன்று வெகு சிறப்பாக நடை பெற்றது, நமது காணிக்கையின் பலனை சகோதரி பாரதி அவர்கள் வந்து பெற்று சென்றார்கள், சகோதரி பாரதி  கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளோடு போராடி வருகிறார்கள். அதே நேரத்தில் நமது உண்மை உபவாச கூடுகை பெரிய ஆசீர்வாத கூடுகையாக அமைந்தது. காரணம் கடந்த ஜனவரி மாதம் சகோதரி  உஷா ராணி என்பவர் தனது கணவரோடு வந்து பங்கெடுத்து நமது உதவியை பெற்று சென்றார்கள். ஆனால் அப்போது அவர் மிகுந்த கண்ணீரோடு நின்றார்கள் காரணம், அவர்களுக்கு கேன்சருக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைக்கு தன்னை வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ மனைக்கு செல்லும்படி தங்கள் ஊர் மருத்துவர் பரிந்துரை செய்திருப்பதையும் நம்மிடம் கூறினார்கள். அதற்கான மருத்துவ சான்றிதழை கையோடு கொண்டு வந்திருந்தார்கள், நாம் அனைவரும் ஒன்றாக அவர்களுக்காக ஜெபித்தோம், பிறகு அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு கடந்து சென்றார்கள், இம்மாத கூடுகைக்கும் வந்திருந்தார்கள், ஜெபத்திற்காக அல்ல சாட்சி சொல்லுவதற்காக. ஆம் கர்த்தர் நம் விண்ணப்பத்தை கேட்டு சகோதரியை கேன்சர் அச்சத்திலிருந்து முற்றிலும் விடுவித்தார். அவர்கள் கூறிய சாட்சியை அப்படியே உங்கள் பார்வைக்கு பதிவேற்றுகிறேன். கர்த்தர் நல்லவர். அவர் நம் மத்தியில் செயலாற்றுகிறவர்.


                                        









No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews