WORD OF GOD

WORD OF GOD

Thursday, November 22, 2018

வாங்க வேதம் படிக்கலாம் - இளைஞர்களுக்காக

ஜாய்லின் தொலைக்காட்சியில் பகிர்ந்துக்க கொண்ட தேவ வார்த்தை , நீங்களும் கேட்டு கர்த்தரை மகிமைப்படுத்தலாமே.

உங்கள் மேலான கருத்துக்களையும், திருமறை சந்தேகங்களையும் கமெண்ட்டில் தெரிவிக்கலாமே .. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.


Thursday, September 6, 2018

அன்பான எனதருமை இணைய வழி விசுவாசிகளே உங்கள் யாவரையும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவில்லா மகிழ்ச்சி கொள்ளுகிறேன். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட தேவ வார்த்தை சகரியா.9:12

நம்பிக்கைகள் பலவகைப்படுகின்றன

அதில் முக்கியமானவை மூன்று

1. மூட நம்பிக்கை
2. தன்னம்பிக்கை
3. இறை நம்பிக்கை (விசுவாசம்)

மூட நம்பிக்கைகள் நம் நாட்டில் நிரம்பி வழிகிறது. 

Wednesday, July 18, 2018

ஞாயிறு செய்தி




ஆசீர்வாத கீதங்கள்


அன்புக்குரிய எனதருமை உடன் விசுவாசிகளே, எனது ஆசீர்வாத கீதங்கள் என்ற ஆடியோ சி.டி யிலிருந்து ஒரு பாடல் உங்களுக்காக கேட்டு ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

Wednesday, January 10, 2018

கர்த்தர் என்னை இரட்சிப்பார்.



ஓரு வயதான போர் வீரர்…  பல போர்க்களம் பார்த்தவர். போர்க்கலையிலிருந்து ஒதுங்கி கிராமத்தில் தங்கி இளைஞர்கள் பலருக்கு பயிற்சி தந்து கொண்டிருந்தார்.
வயதானாலும் எந்த எதிராளியையும் தோற்கடித்து விடும் உடல் வலிவும் மன பலமும் அவருக்கு இருந்தது.
ஒரு இளம் வீரன் அந்த கிராமத்துக்கு வந்தான்.  அவனுக்கு உடல் பலம் மட்டுமல்ல, எதிராளியின் பலவீனத்தைக் கண்டுபிடித்து அவனை வீழ்த்தும் அசாத்தியத் திறமையும் இருந்தது. தன் பேச்சால் எதிராளியை தூண்டிவிட்டு, முதல் தாக்குதலுக்காக காத்திருப்பான். அதில் எதிராளியின் பலவீனம் அறிந்து, பலமாகத் தாக்கி எடுத்த எடுப்பில் வீழ்த்துவதுதான் அவன் சண்டை யுத்தி.
இப்படி அவனால் வீழ்த்தப்பட்ட வீரர்கள் பலர்.
இந்த முதிர்ந்த போர் வீரரை வீழ்த்தி முதன்மை வீரன் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடித்தான்.
கிராமத்தில், வயதான வீரரின் பயிற்சிக் கூடத்துக்கு வந்த வீரன், தன் திட்டத்தைச் சொன்னான். இதைக் கேட்ட முதிய வீரரின் மாணவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இவனுடன் போட்டியிடுவதை வயதான வீரரும் விரும்பவில்லை. ஆனால் வருபவனுக்கும், தன் மாணவர்களுக்கும் ஒரு பாடம் கற்றுத்தர விரும்பினார்.
இளம் வீரனின் சவாலை ஏற்பதாக அறிவித்தார்.
நகரின் நாற்சந்தியில் மோதல் களம். களத்துக்கு வந்ததும் இளம் வீரன் முதியவரின் கோபத்தைத் தூண்டிவிட மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டினான். அவரது முகத்தில் காறி உமிழ்ந்தான். சிறு கற்களை வீசினான். மண்ணை வாரி இறைத்தான்.
அவரை அவமானப்படுத்தி, கோபப்படுத்தி தன் தாக்குதலைத் துவங்கலாமென்பது அவன் நோக்கம். ஆனால் வயதான வீரரோ அசைவற்று அமைதியாக நின்றிருந்தார். கடைசியில் களைத்துப் போய், தோற்றுவிட்ட மனதுடன் அந்த இளைஞன் களத்திலிருந்து வெளியேறினான்.
இளைஞர்கள் அனைவரும் தங்கள் குருவைச் சூழ்ந்து கொண்டனர்.  “என்ன இது… எப்படி இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டீர்கள்? நீங்கள் தோற்றிருந்தாலும்கூட பரவாயில்லை, பதிலுக்கு உங்கள் வாளை உருவி அவனுடன் மோதியிருக்கலாமே.. இப்படி அமைதியாக இருந்து எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே குருவே?,” என்றனர்.
குரு அதே அமைதியுடன் அவர்களை ஏற இறங்கப் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார்… “யாராவது உங்களுக்கு பரிசு கொடுக்க விரும்புகிறார்கள். அவர்களில் உங்கள் எதிரிகளும் இருக்கலாம். அந்தப் பரிசு மோசமானதாகவும் இருக்கலாம். அந்தப் பரிசை நீங்கள் பெற மறுத்துவிட்டால் அது யாருக்குச் சொந்தம்?”
எவ்வளவு அருமையான அணுகுமுறை. 
இதே போல் தாவீது ராஜா தன்  வாழ்வில் சந்தித்த அவமானங்களை சங்கீதம் 55 ல் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த அவமானங்களை ஏற்படுத்தியவர்கள் எதிரிகள் அல்ல அவருடைய நெருங்கின நண்பர்கள், ஆம் தாவீதோடே இருந்து, அவரிடத்தில் சகல நன்மைகளையும் பெற்று அவரால் வாழ்ந்து, அவரால் இந்த உலகத்தில் அடையாளப்படுத்தப்பட்ட, அவர் மிகவும் நம்பியவர்களே . 
சங்கீதம். 55: 
 "12. என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
13. எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்."
எவ்வளவு  மோசமான சூழ்நிலை!!!.  நம் வாழ்விலும்  சில நேரங்களில் இவை நிகழ்கிறது.  நம்மால் வாழ்ந்துவிட்டு நம்மையே பழிக்கிற  கூட்டம்,  ஆனால் நாம் பதட்டப்படுகிறோம், பயப்படுகிறோம், அல்லது கவலையில் உறைந்து போகிறோம். ஆனால் தாவீதின் அணுகுமுறை என்ன தெரியுமா? 16 ம் வசனத்தில் காணலாம்.

16. நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.

காணலாம் ஆடு மேய்த்த தன்னை தெரிந்தெடுத்து அரசனாகிய அன்பு நிறைந்த அற்புதம் நிறைந்த, வல்லமை நிறைந்த, கர்த்தர் என்னை இரட்சிப்பார் தைரியமாக கூறுகிறார்.

எனவே இந்த காலை தைரியமாய் துவங்குவோம், நம்மை நிந்திப்போரை விட்டுத்தள்ளுங்கள் அவர்கள் தகுதி அவ்வளவுதான். அவர்களுக்காகவும் கர்த்தரிடம் வேண்டிக் கொண்டு நம் பணிகளை நாம் தொடருவோம் கர்த்தர் நம்மை காத்தருள்வார். 

Sunday, January 7, 2018

கிறிஸ்துவின் அன்பின் பணி


அன்பான உடன்  விசுவாச உறவுகளே, உங்கள் யாவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் கடந்த 6 ஆண்டுகளாக, கிறிஸ்துவின் வழி நின்று அன்பின் பணி  செய்வதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர் செய்த அன்பின்  பணியை நாம் நிறைவேற்றுவது மிகவும் கடினமாக இருந்தாலும், நம்மால் இயன்ற வரை செய்வது என தீர்மானித்து சில சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அவைகளை பற்றிய ஒரு தொகுப்பு.

கடந்த 2013 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி அன்று மாபெரும் இரத்ததான முகாம்களை நடத்தி வருகிறோம். அதற்கான தகவல்களை நமது இணைய தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறோம்.

அதே போல எச்.ஐ.வி/எய்ட்ஸ்  ஆல் பாதிக்க பட்டவர்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.

உண்மை உபவாச கூடுகை என்ற தலைப்பில் உபவாச கூடுகைகளை நடத்தி அதில் பெறப்படும் காணிக்கைகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை கொடுத்து வந்தோம்.

அதே போல் தொழு நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கான உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.


இத்தகு கிறிஸ்துவின் அன்பின் பணிகளுக்காக புதிய தலைமுறை  மற்றும் காந்தி உலக மையம் என்ற சமூக அமைப்பும் இணைந்து சமூக மாற்றத்திற்கான 100 இளைஞர்களை பல்வேறு சோதனைகளை செய்து தெரிந்தெடுத்தார்கள். அதில் என்னையும் ஒருவனாக தெரிந்தெடுத்து விருது கொடுத்தனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். இதற்காக என்னோடு ஒத்துழைப்பு நல்கிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பான நன்றிகளை ஏறெடுக்கிறேன்.

இதை பெற்ற பொது என் உள்ளத்தில் தோன்றியதெல்லாம் ஒரே ஒரு வசனம் தான்

கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் மத்தேயு. 25:21.

எனவே சமூக மாற்ற பணிகள் தொடர்ந்து நடக்க எனக்காக ஜெபியுங்கள். ஞானஸ் நானம் பெற்றவர்களெல்லாம் கிறிஸ்தவர்களல்ல கிறிஸ்துவை பின்பற்றி நடப்பவர்களே  உண்மையான கிறிஸ்தவர்கள். 

இயேசுவே என் தலைவர். நான் அவர் தொண்டன்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews