அன்பான உடன் விசுவாச உறவுகளே, உங்கள் யாவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் கடந்த 6 ஆண்டுகளாக, கிறிஸ்துவின் வழி நின்று அன்பின் பணி செய்வதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர் செய்த அன்பின் பணியை நாம் நிறைவேற்றுவது மிகவும் கடினமாக இருந்தாலும், நம்மால் இயன்ற வரை செய்வது என தீர்மானித்து சில சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அவைகளை பற்றிய ஒரு தொகுப்பு.
கடந்த 2013 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி அன்று மாபெரும் இரத்ததான முகாம்களை நடத்தி வருகிறோம். அதற்கான தகவல்களை நமது இணைய தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறோம்.
அதே போல எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆல் பாதிக்க பட்டவர்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.
உண்மை உபவாச கூடுகை என்ற தலைப்பில் உபவாச கூடுகைகளை நடத்தி அதில் பெறப்படும் காணிக்கைகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை கொடுத்து வந்தோம்.
அதே போல் தொழு நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கான உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
இத்தகு கிறிஸ்துவின் அன்பின் பணிகளுக்காக புதிய தலைமுறை மற்றும் காந்தி உலக மையம் என்ற சமூக அமைப்பும் இணைந்து சமூக மாற்றத்திற்கான 100 இளைஞர்களை பல்வேறு சோதனைகளை செய்து தெரிந்தெடுத்தார்கள். அதில் என்னையும் ஒருவனாக தெரிந்தெடுத்து விருது கொடுத்தனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். இதற்காக என்னோடு ஒத்துழைப்பு நல்கிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பான நன்றிகளை ஏறெடுக்கிறேன்.
இதை பெற்ற பொது என் உள்ளத்தில் தோன்றியதெல்லாம் ஒரே ஒரு வசனம் தான்
கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் மத்தேயு. 25:21.
எனவே சமூக மாற்ற பணிகள் தொடர்ந்து நடக்க எனக்காக ஜெபியுங்கள். ஞானஸ் நானம் பெற்றவர்களெல்லாம் கிறிஸ்தவர்களல்ல கிறிஸ்துவை பின்பற்றி நடப்பவர்களே உண்மையான கிறிஸ்தவர்கள்.
இயேசுவே என் தலைவர். நான் அவர் தொண்டன்
No comments:
Post a Comment