WORD OF GOD

WORD OF GOD

Wednesday, June 29, 2011

பாதுகாக்கும் கேடகம்

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
உபாகமம்.33 :29

அன்பான உடன் விசுவாசிகளே, இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தை நோக்கி பயணித்துக்  கொண்டிருந்த காலத்தில், கானானுக்கு பொய் சேருவோமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்ததில்லை காரணம், வழி நடத்தி வருபவர் மோசே. எகிப்தில் இருந்து புறப்பட்டபோது எத்தனை தடைகள்? எவ்வளவு போராட்டங்கள்? எவ்வளவு வலிகள் வேதனைகள்? எல்லாவற்றின் மத்தியிலும், மோசேயின் வழி நடத்தலில் மிக எளிதாக கடந்து வந்தார்கள். ஆனால் மோசேவால்  கடைசி வரை வர முடியாதே.

ஆம் மோசேவுக்கு வயதாகிவிட்டது, தன் காலம் முடிய போகிறது என்பதை அவரே உணர ஆரம்பித்தார். இனி தொடர்ந்து இஸ்ரவேல் மக்களை வழி நடத்த முடியாது என்பதை அறிந்துக் கொண்டார். எனவே கடைசியாக இஸ்ரவேல் மக்களை அழைத்து அவர்களுக்கு அறிவோரை வழங்குகிறார். அவர் கூறிய நீண்ட அறிவுரையின் கடைசி வார்த்தைகள் தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.

இங்கே அவர் சொல்லுவது இஸ்ரவேல் பாக்கியமுள்ள ஜனம், இரட்சிக்கப்பட்ட ஜனம், யாருக்கும் நிகரில்லா ஜனம். ஏன் என்றால், இஸ்ரவேலுக்கு உதவியாகவும், பாதுகாக்கும் கேடகமாகவும், வெற்றிதரும் மகிமையுள்ள பட்டையமாகவும் இருப்பவர் கடவுள் என்கிறார்.

சத்தியமான வார்த்தை, மோசே நினைத்திருந்தால், என் பலத்தால் இதை சாதித்தேன், இனி நீங்களும் என்னை போல் வாழுங்கள் என்று சொல்லி தன்னை மேன்மைபடுத்திக்கொண்டிருக்க முடியும். காரணம் இன்று அநேகர் கடவுள் கொடுத்த வரங்களினால் வல்லக்காரியங்கள் செய்து எதோ தானே செய்ததாக சுவரொட்டிகளில் தங்களை மேன்மைப்படுத்திக்  கொள்வதை போல் அவரும் செய்திருக்க முடியும் ஆனால் அதை செய்யவில்லை. காரணம். அது உண்மையல்ல. இவ்வளவு நாள் உங்களை நடத்தியது, உங்களை இரட்சித்தது, உங்களை தெரிந்துக் கொண்டது, உங்களுக்கு சகாயம் செய்தது, உங்களை பாதுகாக்கும் கேடயமாய் இருந்தது, உங்களுக்கு வெற்றிதரும் பட்டையமாய் செயல் பட்டது, நானல்ல அவரே என்று சரியான பாதையில், வெற்றிவரும் பாதையில் தன்னை தாழ்த்தி அவரை உயர்த்தி தன் கடைசி அறிவுரையை முடிக்கிறார்.

அன்பானவர்களே. இன்றைக்கு மோசே இத்திரு வசனங்கள்  வாயிலாக நமக்கு சரியான அறிவுரையை தருகிறார். எப்படி முன்னேறி செல்ல போகிறேன்? யார் எனக்கு துணை என்று அஞ்சுகிறீர்களா?


நமக்கு உதவி செய்பவராக, பாதுகாக்கும் கேடகமாக, நம் தீமைகளை அறுத்தெறியும் பட்டையமாக, நமக்கு துணையாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். நம்மை காக்க சிலுவையில் ஜீவனையே கொடுத்தவர். இன்றும் நம்மை காக்க நம்மோடு நம் வாழ்வோடு பயணிக்கிறார். இந்த விசுவாசத்தோடு இந்நாளை துவங்குவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, June 28, 2011

வாழ்த்துக்கள்.


அன்பான உடன் விசுவாசிகளே, இன்று காலை எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. காரணம். JESUS  SAVES  MINISTRY  நண்பர்கள் ஒரு வலை பக்கத்தை ஆரம்பித்திருப்பதை இன்று காலைதான் அறிந்தேன். கர்த்தரின் நாமம் வலைத்தளம்  முழுவதும் நிரம்பி வழிய வேண்டும். இந்த இனிய முயற்சியை துவங்கியிருக்கும். விண்ணமங்கலம் திருச்சபை வாலிபர்களான,

சகோதரர்.செல்வின் ராஜ், 
சகோதரர். பாபு பிரபு தாஸ்,
சகோதரர்.பாரத் குமார்

ஆகியோரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்தி வலையுலகிற்கு வரவேற்கிறேன். கர்த்தர் உங்கள் முயற்சியை மிகவும் பெருக செய்து ஆசீர்வதிப்பார். நான் உங்கள் தளத்தின்  வாசகனாக தொடர்ந்து வருவேன்.

அன்பான வாசகர்களே நமது சகோதரர்கள் ஆரம்பித்திருக்கும் தளத்தை இந்த லிங்கில் (தொடர்பில்)  காணவும்.






கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, June 27, 2011

இயேசு கிறிஸ்துவை அனுபவித்து பாருங்கள்

சங்கீதம்.28 :6 -7 

6. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.


7. கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.

சந்தோஷம் என்பது மனித வாழ்வின் அடிப்படை தேடல். அனால் எளிதில் சந்தோஷம் கிடைத்துவிடுவதில்லை. காரணம் துன்பமும் போராட்டமும் தான் இன்றைய வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது. இந்த மாதம் புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. ஒவ்வொரு  பெற்றோரும் கண்ணீரோடு போராடி வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை கட்ட இரத்த வேர்வையோடு பணத்தை புரட்டி வருகின்றனர்.

கல்வி ஏழை பிள்ளைகளுக்கு எட்டா கனியாக என்றைக்கோ மாறி இன்று ஏழை பெற்றோரின் இரத்தத்தை உறிஞ்சி வருகிறது. பெற்றோரும் மாணவர்களும் எவ்வளவு போராடினாலும், இவர்கள் குரல் இன்னும் அரசாங்கத்தின்  வாசல்களை திறக்கவில்லை. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது நிரூபணமாகி வருகிறது. ஆனால் நம் குரலை, நம் விண்ணப்பத்தை, கேட்க ஆவலோடு ஒருவர் காத்திருக்கிறார்.

என் நாமத்தில் நீங்கள் எதை கேட்டாலும் பெறுவீர்கள் என்று உத்தரவாதமும் கொடுத்திருக்கிறார். அவர்தான் நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்து. கேட்பாரா? கேட்டால் இந்த பொல்லாத உலகத்தில் அவரால் என்ன செய்ய முடியும்? நம் நிலை மாறிவிடுமா? இதென்ன மந்திரமா? என்ற கேள்விகள் உள்ளத்தில் எழுகிறதா? இது மந்திரமல்ல வாழ்க்கை அனுபவம்.

நம்முடைய தியானப் பகுதியில் ஒரு பக்திமான்  தன் அனுபவத்தை குறிப்பிடுகிறார். என்னை சுற்றி துன்மார்க்கரும் பொல்லாதவர்களும் இருக்கிறார்கள் நீர் என் ஜெபத்தை கேட்காவிட்டால் நான் குழியில் இறங்குவதற்கு சமமாவேன் என்கிறார். அதாவது பிணத்திற்கு சமமாவேன் என்கிறார். ஆனால் 6  வது வசனத்தில் கர்த்தர் என் விண்ணப்பத்தை கேட்டார் என்று வாக்குரைக்கிறார்.

அடுத்த வசனத்தில் கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். என்கிறார். எப்படி இந்த மாற்றம் வந்தது? இதை விவரிக்க முடியாது அனுபவித்து பார்த்தால் இந்த மேன்மை புரியும்.

அன்பானவர்களே, இக்கட்டில் ஆறுதலளிக்கும், துன்பத்தில் பலனளிக்கும் இயேசு கிறிஸ்துவை அனுபவித்து பாருங்கள். பெற்ற நன்மையை அனுபவத்தை சாட்சியாய் எனக்கு எழுதி அநேகருக்கு அறிவித்து உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews