அன்பான மாணவ செல்வங்களே, குறிப்பாக தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் 12 ம் வகுப்பு மாணவர்களே, இதோ உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தேர்வை சந்திக்கிறீர்கள், யாருடைய கட்டாயத்திற்காகவும் இத்தேர்வை நீங்கள் சந்திக்கவில்லை, உங்கள் எதிர்காலத்துக்காய் சந்திக்கிறீர்கள் என்பதை உணர்ந்து தேர்வுக்கு ஆயத்தப்படுங்கள், கல்விதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக நம் நாட்டில் இப்போது உருவாகிவிட்டது எனவே கவனமாய் காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.
சுமையாக தேர்வை நினைக்காதீர், இதுதான் உங்கள் பள்ளிக்கூட வாழ்வில் உங்கள் சக நண்பர்களோடு சந்திக்கப்போகும் கடைசி தேர்வு என்ற சுகமான அனுபத்தோடு தேர்வுக்கு ஆயத்தமாகுங்கள். வெற்றி என்ற பட்டத்தை பெற தீவிரமாய் உழையுங்கள், வெற்றி எப்போதும், யாருக்கும் எளிதாக கிடைக்கவில்லை. எனவே கடுமையான உழைப்பு அவசியம், இந்த சில நாட்கள் நீங்கள் கஷ்ட்டப்பட்டுவிட்டால், வரப்போகிற எதிர்காலம் சுகமானதாக இருக்கப்போகிறது. இது துன்பமல்ல உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நீங்கள் போடப்போகிற அஸ்திபாரம்.
மனதை ஒருமுகப்படுத்த காலையில் சில மணித்துளிகளை ஆண்டவரோடு செலவிடுங்கள், அவரோடு பேசுங்கள் வல்லமையை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள், அவரே நம் உழைப்பை ஆசீர்வதிக்கிறவர். நாம் உயர தன்னை மாய்த்துக் கொண்டவரல்லவா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவர் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார், தேர்வு பயமோ, பதட்டமோ, இல்லாமல் உங்கள் உள்ளத்தை நிறைந்த சமாதானத்திற்கு நேராய் நடத்துவார், காரணம்
அவர் உங்கள் முகத்தை பார்ப்பவரல்ல இருதயத்தை பார்ப்பவர் (1சாமுவேல். 16:7). .
அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம் 34:5
இந்த வசனத்தை நினைவில் நிறுத்துங்கள், தினமும் அவரை நோக்கி பாருங்கள், சந்தோஷமாய் படியுங்கள் வெற்றி நிச்சயம்.
விசேஷமாய் ஜெபிக்க விரும்புவோர் உங்கள் பெயரை இமெயில் அனுப்புங்கள் உஙளுக்காக ஜெபிக்க காத்திருக்கிறேன்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment