WORD OF GOD

WORD OF GOD

Monday, April 1, 2013

BLOOD CAMP

அன்பான உடன் விசுவாசிகளே, கடந்த பல நாட்களாக என்னால் பதிவிட இயலவில்லை, காரணம் எனது லேப்டாப் பழுதடைந்துள்ளது.  இப்போதும் எனது உறவினர் கணிப்பொறியிலிருந்தே பதிவிடுகிறேன். 

தொடர்ந்து தவறாமல் கண்டு வரும் விசுவாசிகளுக்கு என் நன்றிகள். கடந்த புனித வெள்ளி அன்று நமது ஊழியத்தின் சார்பாக ஆம்பூரில் உள்ள கன்கார்டியா மேனிலை பள்ளியில், ஒரு ரத்த தான முகாமை நடத்தினோம் நமது பாவங்களுக்காய் நமது ரட்சகர் தன்  திரு ரத்தம் சிந்தினார், அதை வார்த்தையில் அறிவிப்பதை காட்டிலும் செயலில் அறிவிப்பதே சால சிறந்தது. இந்த சிறியரில் ஒருவருக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்ற,  அவரது வாக்கை நிறைவேற்ற, நமது சகோதரர்களான இயேசுவின் குரல் ஊழியர்களும் அனேக விசுவாசிகளும் ஒன்றிணைந்து இம்மாபெரும் அன்பின் ஊழியத்தை அரங்கேற்றினோம்.

ஏறக்குறைய 120 வாலிபர்கள் ரத்தம் கொடுக்க திரண்டு வந்தனர் ஆனால் நாம் 75 பேருக்கான ஆயத்தங்களை மாத்திரமே செய்திருந்ததால் அவர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை, அநேகரை ஆம்பூர் பெதஸ்தா மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தோம். அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்தவமனையின் ரத்த  வங்கியிலிருந்து வந்த சகோதர சகோதரிகள் நமது ஊழியத்திற்கு உதவினர்.

இயேசுவின் தியாகத்தை வாழ்வில் உணர்த்திய அனைத்து சகோதர சகோதரிகளையும் நான் வாழ்த்துகிறேன். அதற்கான புகைப்பட தொகுப்பை காணுங்கள் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.

துவக்க ஆராதனை (திரு.தேவகுமார் ஆசிரியர் CHS )

வருகை பதிவு 

ரத்த பரிசோதனை 

ரத்தம் கொடுக்கும் ஒரு சகோதரர்.

திரண்டு வந்த வாலிபர்கள் 





Rev.Gladson (ஒரு போதகர் பங்கு பெற்றது எங்கள் குழுவுக்கு  மிக்க மகிழ்ச்சி )

திரள் திரளாய் வாலிபர்கள் 

திரள் திரளாய் வாலிபர்கள் 


சான்றிதழ் வழங்கப்பட்டது.

 before the camp our brothers prepared a nice lunch for the donars.







closing prayer with the medical team.





அற்புதமாய், நம் இயேசு நமது முயற்சியை பெரும் வெற்றிபெற செய்தார் இந்த அன்பின் கிறிஸ்தவம் வளர ஜெபிப்போம் தொடர்ந்து நமது ஊழியத்தை ஜெபத்தில் தாங்குங்கள்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

1 comment:

  1. Dear Loveable Pastor Gilbert,
    Easter Greetings to you.
    You doing this Job is Great......


    Rev.LSD.Gladson Deva Premkumar

    ReplyDelete

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews