கிறிஸ்துவுக்குள் அன்பான என் இணைய நண்பர்களே, உங்கள் யாவருக்கும் என் அன்பான ஸ்தோத்திரங்கள், நாளை காலை, எமது ஊழிய குழுவாக சிறுவர் கொண்டாட்டம் என்ற சிறார்களுக்கான திருப்பணிக்காக சிந்தகமெனிபெண்டா என்ற மலையில் தேவராஜபுரம் என்ற பகுதியில் உள்ள ஆலயத்திற்கு கடந்து போகிறோம். ஊழியர் வி.கெ.சம்பத்குமார் அவர்கள் நமது ஊழியத்தினை அறிந்து நம்மை உற்சாகமாய் அழைத்துள்ளார். சிறிது இடைவெளிக்கு பின் கர்த்தர் மீண்டும் இப்படியொரு வாய்ப்பை கிருபையாய் எனக்கு கொடுத்துள்ளதால் மிகவும் மகிழ்கிறேன். கர்த்தருக்கே துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. இந்த ஊழியத்தை உங்கள் ஜெபத்தில் தாங்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன். நன்றி..
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
No comments:
Post a Comment