உபவாச கூடுகை கர்த்தருடைய பெரிதான கிருபையினால் கடந்த
சனிக்கிழமை (8.11.2014) அன்று மாலை 6.30 முதல் 8 மணிவரை சிறப்பாக நடை
பெற்றது. மூன்று ஏழை விதவை சகோதரிகள் வந்து நமது காணிக்கையை
பொருட்களாக பெற்றுக் கொண்டு கர்த்தருக்கு நன்றி செலுத்தி கடந்து
போனார்கள். நமது ஜெப கூடுகையோடு இணைந்து அருமை சகோதரர் விக்டர்
அவர்கள் ஒரு குடும்பத்திற்கும், தன் பெயரை தெரிவிக்காமல் ஒருவர் இரு
குடும்பங்களையும் தாங்கினார்கள். அநேக விசுவாசிகள் வந்து பங்கெடுத்து
உற்சாகமாய் ஏழைகளை தாங்க காணிக்கை கொடுத்து தேவ
ஆசிர்வாதத்தோடு கடந்து சென்றார்கள். கர்த்தருக்கு பெரிதான நன்றி. உதவி
பெற்றுக் கொண்ட சகோதரிகள் திருமதி.பவானி , திருமதி.சாந்தி ,
திருமதி. மகேஸ்வரி இவர்கள் மூவருக்கும் படிக்கிற பிள்ளைகள்
இருக்கிறார்கள் , அவர்களுக்காக அவர்களுடைய பிள்ளைகளுக்காக உங்கள்
ஜெபங்களில் தாங்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஜெபக்கூடுகையில் ஊழியர் செல்வம் அவர்கள் துதி ஆராதனை
நடத்தினார். மீட்பின் பேழை ஆசிரியரும் ஊழியருமான உதயக்குமார்
அவர்களும், அருள்திரு ஐசக் ஷண்முகம் அவர்களும் பங்கெடுத்து ஜெபித்து
சிறப்பித்தனர்.
- ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்.19:17
No comments:
Post a Comment