WORD OF GOD

WORD OF GOD

Sunday, September 3, 2017

சோறு இல்லாம கூட இருந்துடுவான் ஆனா செல்போன் இல்லாம இருக்க மாட்டான் என்ற நிலை இன்று உண்டாகிவிட்டது, 

செல்போன் என்பது இன்று மனிதனின் இன்னொரு விரல் என்று கூறுகிறார்கள, செல்போன் இல்லாமல் வாழவே முடியாத நிலைக்கு நாம் வந்திருக்கிறோம், இந்த செல்போன் கொடுக்கும் ஆபத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல, 

இன்று நடைபெறும் பல சாலை விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது, 

மேலும் இது பயன்படுத்துவோரை அதற்கு அடிமையாக்கிவிடுகிறது.  
மொபைல் போன் பயன்படுத்தினால் சரியாக தூக்கம் வராதாம் ஏனென்றால், அதில் உள்ள நிறம், தூக்கத்தை கட்டுபடுத்திவிடும் எனவேதான் இரவில் நீண்ட நேரம் செல்போன் உபயோகிப்பவரை நாம் பார்க்க முடியும். 

புளூ வேல் என்ற விளையாட்டு சிறுவர்களை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி இறுதியில் தற்கொலை செய்ய தூண்டுகிறது. 

ஜூலை மாதம் 17ம் தேதி, நாயக் கதிரேசன் என்ற இராணுவ வீரர், பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தி கொண்டிருப்பதை, அவருடைய உயரதிகாரியான ஷிகார் தாபா என்பவர் பார்த்து பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தவறு என்று கண்டிக்கிறார், அவ்வளவுதான்,  நாயக் கதிரேசன் இதனால் கடும் ஆத்திரம் உண்டாகி தன் கையில் இருந்த ஏகே-47 துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார். 

செய்த குற்றத்தை கண்டிப்பது உயரதிகாரியின் பணி, அதற்கு கீழ்படிய வேண்டியது ஒரு பணியாளரின் கடமை, ஆனால் இன்று யாரும் குற்றத்தை எடுத்து சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக குற்றம் சொன்னவன எப்படி ஒழிக்கலாம்னு திட்டமிடராங்க. 

எரேமியா தீர்க்கதரிசி இதை தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அனுபவித்தவர். எரேமியா தீர்க்கதரிசிக்கு கடவுள் கொடுத்த பொறுப்பு இஸ்ரவேல் மக்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்கள் மனந்திரும்ப வழி நடத்த வேண்டும். ஆனால் யாரும் மனந்திரும்பவில்லை, மாறாக, குற்றத்தை சுட்டிக்காட்டிய எரேமியாவுக்கு அடி 20:2 , உதை, அவமானம், இவைகள்தான் பரிசாக கிடைத்தது. இதை அவர் யாரிடம் சொல்ல முடியும், அவரை அழைத்து கட்டாய படுத்தி கொடுத்த கர்த்தரிடத்தில்தானே சொல்ல முடியும், 

இவ்வாறு, தான் அனுபவிக்கும் வேதனையை கர்த்தருக்கு தெரிவிக்கிற ஜெபம்தான் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதி. 

எப்படி தன் ஜெபத்தை துவங்குகிறார், கர்த்தாவே நீர் இதை அறிவீர் என்று துவங்குகிறார், நாம் ஜெபம் செய்யும்போது ஆண்டவருக்கு தெரியாதுனு நினெச்சி நீண்ட நேரம் விளக்கமா சொல்லிட்டிருப்போம், இல்ல ஆண்டவருக்கு நாம் என்ன கேட்க போகிறோம் என்பது தெளிவாக தெரியும். என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னை துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீதியை சரி கட்டும் என்று துவங்குகிறார், இதற்கு அர்த்தம் என்ன, என்னை துன்பப்படுத்துகிறவர்களை தண்டியும் என்பதே. அடுத்த வசனத்தில்,

அவர் எப்படிப்பட்டவர் என்று கூறுகிறார்..

உம்முடைய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சி. என்று கூறுகிறார், அதாவது, அவருடைய வார்த்தைகளை அவர் வேண்டாம் என்று சொல்லவில்லை, மாறாக இந்த வார்த்தைகளை, சொல்லும்போது துன்பப்படுத்துகிறவர்களை தண்டியும் என்பதே அவரது விண்ணப்பம். 

மேலும் அடுத்த வசனத்தில், நான் பரிகாசக்காரர் கூட்டத்தில் களித்ததில்லை, உமது கரத்தினால் தனித்து உட்கார்ந்தேன். அதாவது இவர் மிக இளம் வயதில் திருப்பணிக்கு வந்ததால், அவர் அவர் வயதுக்கு ஒத்த நண்பர்களோடு, இயல்பாக கூடி பேசி மகிழ்ந்ததில்லை என்பதை கூறுகிறார். 

கடவுளின் மீது சில குறைகள்.
1. சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
2. நித்திய ஆறாத காயம்
3. கானல் நீர் - கடவுள்
4. வற்றிப்போகிற தண்ணீர் - கடவுள்

19-21 கடவுளுன் பதில், 

நீ திரும்பினால், சீர்படுத்துவேன். 
அப்படியானால், எரேமியா கடவுளிடம் திரும்பவில்லையா? சீர் கெட்டு போயிருக்கிறாரா?? ஆம் இதை புரிந்துக் கொள்ள, இன்றைய சுவிசேஷ பகுதியை விளங்க வேண்டும். 

மத்தேயு. 16:21-28
 தன் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவிக்கிறார். - பேதுரு அவரை தனியே அழைத்து அவனை கண்டிக்கிறார், உடனே இயேசு பேதுருவை, எனக்கு பின்னாக போ சாத்தானே, என்று பேதுருவை சாத்தான் என்று கடிந்துக் கொண்டார்.. ஏன்??? 

கடவுளுக்கு ஏற்றவைகளை அவன் சிந்திக்கவில்லை. அதாவது இயேசு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறானே, ஆனால் அவர் நன்றாக இருந்தால், நாம் மீட்படைய முடியாதே, அவர் கொடுத்த பொறுப்பை எத்தனை சவால் இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது அவரது கடமை. 

அதேதான் எரேமியாவுக்கும், கடவுள் கொடுத்த பணியை 

Monday, July 31, 2017

நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்?????


        யோவான் 5ம் அதிகாரம் 1 முதல் 9 வரையுள்ள வசனங்களில், இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு சென்றார். அங்கே ஒரு குளம் இருந்தது, அந்த குளத்திற்கு பெதஸ்தா குளம் என்று பெயர். இந்த குளத்திற்கென்று ஒரு சிறப்பு இருந்தது. அந்த சிறப்பு யாதெனில், திடீரென்று ஒரு தேவதூதன் தோன்றி அந்த குளத்தை கலக்குவார். அப்போது உடல் சுகவீனம் உள்ளவர்கள் அந்த குளத்தில் இறங்கினால் அவர்கள் முற்றிலும் குணமாவார்கள். எனவே அந்த குளத்தை சுற்றி ஆயிரக்கணக்கான நோயாளிகள் கூடியமர்ந்து தேவதூதன் குளத்தை கலக்கும் வேளைக்காக காத்திருப்பார்கள். அந்த குளத்தின் அருகில் ஒருவர் 38 வருடமாய் படுத்த படுக்கையாய் கிடக்கிறார், அந்த குளத்தணடைக்கு இயேசு வருகிறார். இயேசு நேராக அந்த 38 வருட படுத்த படுக்கையாய் இருப்பவரை தேடி போகிறார். குளத்தின் கரையில் இருக்கிற அனைவருமே நோயாளிகள் அப்படியிருக்க இயேசு ஏன் இவரை மட்டும் தேடி வருகிறார்??? இதற்கான விடை இயேசு துவங்கும் உரையாடலில் உள்ளது..

இயேசு அவரிடம் நீ குணமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.. அதற்கு அவர் கூறிய மறுமொழி, ஆண்டவரே தண்ணீர் கலக்கப்படும்போது என்னை குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை.. நான் போகிறதற்கு முன்னமே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான் என்றான்.. இங்கே நாம் கவனிக்க வேண்டியது இயேசு கேட்ட கேள்வி என்ன???? உனக்கு குணாமாக விருப்பம் இருக்கிறதா என்பதே.. இதற்கு ஆம் இல்லை என்று பதிலளித்தால் போதுமானது ஆனால் அவன் கூறிய பதில் எனக்கு யாரும் உதவவில்லை என்பதே… அப்படியானால் ஒரு மனிதனுக்கு தான் குணமாகவில்லை என்கிற வலியைவிட தன்னை யாரும் கண்டுக் கொள்ளவில்லை என்ற வலியே அதிகமாக இருக்கிறது..

உண்மை தானே, 38 வருடத்தில் ஏதாவது ஒரு நாள், அங்கே நாள்தோறும் வந்து போகிற ஆயிரக் கணக்கான மக்களில் யாராவது ஒருவர் அவரிடம் போய் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருந்தால் அவர் எப்போதோ குணமாகியிருப்பாரே. எனக்காக யாருமே இல்லை என்ற வலி, வேதனையின் உச்சம்.

நாமும் கூட பல நேரங்களில் கலங்கி நிற்பது நம்மை உண்மையாய் நேசிக்கிற ஒருவர் இல்லையே என்றுதானே. ஆனால் நாம் கவலைப்பட தேவையில்லை. யாரெல்லாம் இவ்வாறு சமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறார்களோ அவர்களையெல்லாம் அரவனைத்து வாழ்விப்பதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னவர். நம்மோடு இருக்கிறார். யுக முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடு இருக்கிறார்.

உலகை நம்பியா? சுற்றத்தை நம்பியா? உறவுகளை நம்பியா? சக மனிதர்களை நம்பியா? நம்மை ஆள்பவர்களை நம்பியா? இல்லை, இந்த அண்ட சராசரத்தை படைத்து பாதுகாத்து பராமரித்து வருகிற சர்வவல்லவரை நம்பி வாழ்கிறோம்.. கர்த்தர் நம் பட்சத்தில் இருந்தால்  நமக்கு இரோதமாய் இருப்பவன் யார்?????


துணிவுடன் துவங்குவோம் இந்த காலை பொழுதை, 38 வருடம் படுத்த படுக்கையாய் இருந்தவனை துள்ளி குதித்து ஓட செய்தவர் நம்மை விட்டுவிடுவாரா என்ன????

Sunday, July 30, 2017

அன்பான உடன் விசுவாசிகளே, ஒருவரை உயர்த்தி பேசுதல் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும். 

Friday, July 28, 2017

மனம் அமைதி பெற - 6

அன்பான உடன் விசுவாசிகளே 2011 ம் ஆண்டு துவங்கிய நமது ஆவிக்குரிய இணைய பக்கம் தொடர்ச்சியாக  பயணிக்கவில்லை காரணம் எனது அதிகமான பணிகளுக்கு நடுவே தொடர்ந்து பதிவிடுவது பெரிய சவாலாக இருந்தது. மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு மனம் அமைதி பெற என்ற நமது ஆவிக்குரிய வழியில்  மனோ தத்துவ யுக்திகளை ஆராயும் பகுதியை மீண்டும் பதிவிட விழைகிறேன். இதை குறித்து அறிந்துக் கொள்ள கடந்த 5 பகுதிகளை நம் பக்கத்தில் கண்டு, படித்துவிட்டு தொடரலாம்.
இப்பகுதியை  நான் துவங்கியதின் நோக்கம் நம்மை சுற்றியிருக்கும் நெருக்கமான சூழ் நிலைக்கு நடுவே நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காகவே. கடந்த 5 பகுதிகளில் நாம் கண்டவைகளின் ஒரு சுருக்கம். 

முதலாவது நாம் கண்டது நம் பலமென்ன ?? பலவீனமென்ன என்று அறிந்து ஒப்புக் கொள்ள வேண்டும்
இரண்டாவது அடுத்தவர்களுக்கு பலமும் பலவீனமும் உண்டு. என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது அடுத்தவரது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துக் கொள்ள அவரை கவனிக்க வேண்டும், அதாவது நாம் பேசுவதை குறைத்து அடுத்தவர் பேச இடமளித்து அவரது வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நான்காவது கவனிப்பது எவ்வளவு சிரமமானது என்பதை அறிந்தோம். 

இப்போது கவனிப்பதில் இருக்கிற வகைகளை அறிந்துக் கொள்வோம். 

ஒருவர் பேசும்போது நாம் கவனிப்பதை பல வகைகளாக பிரிக்கலாம், அவைகளில் முக்கியமான மூன்று வகைகளை நாம் அறிந்துக் கொள்வது போதுமானது.
1. PASSIVE LISTENING - மேலோட்டமாக கவனித்தல்
2.SELECTIVE LISTENING - தேர்ந்தெடுத்து கவனித்தல்
3.ATTENTIVE LISTENING - கூர்ந்து கவனித்தல். 

மேலோட்டமாக கவனித்தல் என்பது ..
ஒரு மனைவி சீரியல் பார்த்துக் கொண்டே கணவன் பேசுவதை கவனிப்பதற்கு சமம்., அதாவது கவனம் முழுக்க சீரியலில் இருக்கும் ஆனால் கணவன் சொல்வதற்கு உம் , உம்  என்று பதிலளித்து கவனிப்பதை போல நடிப்பார்கள்.  ஆர்வமே இல்லாமல் - கவனிப்பதை போல பாவலா செய்வது. இவ்வாறு கவனிப்பது அடுத்தவரை புரிந்துக் கொள்ள எவ்விதத்திலும் உதவாது. பிள்ளைகள் பேசும்போதோ.. வாழ்க்கைத் துணைவர் பேசும் போதோ இப்படி கவனிப்போமானால் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த மேலோட்டமாக கவனிப்பவர்களை தான் நம் வாழ்வில் நாம் அதிகமாக பார்க்கிறோம், தான் பேச வேண்டிய கருத்தை பேசுவதில் அதிக கவனம் செலுத்துவார்களே  தவிர அடுத்தவர் பேசுவதை துளியும் கவனிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களோடு நாம் தொடர்ந்து பேசுவதை விரும்ப மாட்டோம், அங்கே உறவே முறியும். இப்படி அடுத்தவர்கள் பேசுவதை துளியும் கவனிக்காமல் தான் மட்டுமே பேசுகிறவர்களை தான் நாம் பிளேடு அல்லது அறுவை என்று கூறுகிறோம், 

ஆனால் கடவுள் நம் விண்ணப்பங்களை எப்படி கேட்கிறார் என்று பாருங்கள். 

சங்கீதம்.116: 1. கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.2. அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

நம்முடைய கடவுள் நாம் கூப்பிட்டால் செவியை சாய்த்து கேட்கிறவர். நாம் எப்படி கேட்கிறோம்??  

தொடரும்....






Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews