அன்பான உடன் விசுவாசிகளே 2011 ம் ஆண்டு துவங்கிய நமது ஆவிக்குரிய இணைய பக்கம் தொடர்ச்சியாக பயணிக்கவில்லை காரணம் எனது அதிகமான பணிகளுக்கு நடுவே தொடர்ந்து பதிவிடுவது பெரிய சவாலாக இருந்தது. மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு மனம் அமைதி பெற என்ற நமது ஆவிக்குரிய வழியில் மனோ தத்துவ யுக்திகளை ஆராயும் பகுதியை மீண்டும் பதிவிட விழைகிறேன். இதை குறித்து அறிந்துக் கொள்ள கடந்த 5 பகுதிகளை நம் பக்கத்தில் கண்டு, படித்துவிட்டு தொடரலாம்.
இப்பகுதியை நான் துவங்கியதின் நோக்கம் நம்மை சுற்றியிருக்கும் நெருக்கமான சூழ் நிலைக்கு நடுவே நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காகவே. கடந்த 5 பகுதிகளில் நாம் கண்டவைகளின் ஒரு சுருக்கம்.
இப்பகுதியை நான் துவங்கியதின் நோக்கம் நம்மை சுற்றியிருக்கும் நெருக்கமான சூழ் நிலைக்கு நடுவே நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பதை அறிந்து கொள்வதற்காகவே. கடந்த 5 பகுதிகளில் நாம் கண்டவைகளின் ஒரு சுருக்கம்.
முதலாவது நாம் கண்டது நம் பலமென்ன ?? பலவீனமென்ன என்று அறிந்து ஒப்புக் கொள்ள வேண்டும்
இரண்டாவது அடுத்தவர்களுக்கு பலமும் பலவீனமும் உண்டு. என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது அடுத்தவரது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துக் கொள்ள அவரை கவனிக்க வேண்டும், அதாவது நாம் பேசுவதை குறைத்து அடுத்தவர் பேச இடமளித்து அவரது வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நான்காவது கவனிப்பது எவ்வளவு சிரமமானது என்பதை அறிந்தோம்.
இப்போது கவனிப்பதில் இருக்கிற வகைகளை அறிந்துக் கொள்வோம்.
ஒருவர் பேசும்போது நாம் கவனிப்பதை பல வகைகளாக பிரிக்கலாம், அவைகளில் முக்கியமான மூன்று வகைகளை நாம் அறிந்துக் கொள்வது போதுமானது.
1. PASSIVE LISTENING - மேலோட்டமாக கவனித்தல்
2.SELECTIVE LISTENING - தேர்ந்தெடுத்து கவனித்தல்
3.ATTENTIVE LISTENING - கூர்ந்து கவனித்தல்.
மேலோட்டமாக கவனித்தல் என்பது ..
இந்த மேலோட்டமாக கவனிப்பவர்களை தான் நம் வாழ்வில் நாம் அதிகமாக பார்க்கிறோம், தான் பேச வேண்டிய கருத்தை பேசுவதில் அதிக கவனம் செலுத்துவார்களே தவிர அடுத்தவர் பேசுவதை துளியும் கவனிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களோடு நாம் தொடர்ந்து பேசுவதை விரும்ப மாட்டோம், அங்கே உறவே முறியும். இப்படி அடுத்தவர்கள் பேசுவதை துளியும் கவனிக்காமல் தான் மட்டுமே பேசுகிறவர்களை தான் நாம் பிளேடு அல்லது அறுவை என்று கூறுகிறோம்,
ஆனால் கடவுள் நம் விண்ணப்பங்களை எப்படி கேட்கிறார் என்று பாருங்கள்.
சங்கீதம்.116: 1. கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.2. அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
நம்முடைய கடவுள் நாம் கூப்பிட்டால் செவியை சாய்த்து கேட்கிறவர். நாம் எப்படி கேட்கிறோம்??
தொடரும்....
No comments:
Post a Comment