WORD OF GOD

WORD OF GOD

Thursday, March 31, 2011

காலை மன்னா (வீழ்ந்துப்போன யூதாஸ்)

வீழ்ந்துப் போன யூதாஸ்.

தியான பகுதி மத்தேயு.26 :46 -50 

46. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.

47. அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

48. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

49. உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

50. இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள் 



சிலுவையின் நாயகனாகிய பாடுபடும் தாசன் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம். இயேசுவின் சிலுவைப் பாதையில், உதவியோரும் உண்டு, துரோகம் செய்தவர்களும் உண்டு.

இங்கு இயேசுவின் உடன் ஊழியனாகிய யூதாஸ், உடன் உண்டு, உறங்கி, ஒன்றாக வாழ்ந்து இறுதியில் காட்டிக் கொடுத்தான்.

*யூதாஸ் கரியோத்: கிரேக்க வார்த்தை

*யூதேயாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே அப்போஸ்தலன்.

*செலோத்தியன்: தீவிரவாதி .

நாடு சுதந்திரம் அடைய வேண்டும், என்ற ஒரு தாகம், அவனுக்கு இருந்தது.

# ரோம பேரரசை எதிர்த்தவன்:-

லூக்கா.22 :33 , யோவான்.14 :22  ஆகிய வசனங்கள் யூதாசை விமர்சிக்கிறது.

1 . பொய்யன்.

2 . வாள் வைத்திருப்பவன்.

யூதாஸ் இயேசுவால் நம்பி அழைக்கப் பட்டவர்:

சுவிசேஷ பனி செய்வதற்கு இயேசு யூதாசை கூப்பிட்டார். இயேசு ஆண்டவர், நம்மையும் உண்மையுள்ளவர்கள் என்று அழைத்துள்ளார். நாம் இன்று எப்படி நடந்துக்கொள்கிறோம்.

போலித்தனம் பொதிந்த யூதாஸ்:

கவரிங் நகை. தங்கத்தின் போலி. அதேபோல யூதாஸ் ஒரு போலி சீடன். நாமும் போலியாக உள்ளோமா? இரட்டை வாழ்வு வாஹ்கிரோமா?

யோவான்.௧௨:௬ ல் யூதாஸ் திருடன் என்று யோவான் தெளிவாக கூறுகிறார்.

ஆனால் காரினை வள்ளலாகிய இயேசு அவரை 'சிநேகிதனே"  என்று அழைக்கிறார்.
லூக்கா.6 :16  ல் துரோகி என்று சொல்லப்பட்டுள்ளது, ஆனால் இயேசுவோ அவனையும் நம்பித்தான் கூப்பிட்டார்.

இன்று பலர் உண்மையான முகத்தை மறைத்துக்கொண்டு, முகமூடியோடு வாழ்ந்து வருவதை காண முடியும். இதேபோல அன்றைய யூத சமூகத்தின் பெரும் புள்ளிகளும், மதத் தலைவர்களும் போலித்தனமான முக மூடிகளை அணிந்துக்கொண்டு, வாழ்ந்தனர். ஆனால் இயேசுவின் விஷயத்தில்  அவர்களின் சுய ரூபம் வெளிப்பட்டது. உண்மைக்கு சாட்சிக் கொடுத்த இயேசுவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற ஒத்தக் கருத்துடன் செயல் பட்டனர்.

பண ஆசைக்கொண்ட யூதாசை இதற்கு பயன் படுத்திக்கொண்டனர்.

 1தீமோத்தேயு.6;10 ௦  பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர்.
சிலர் அந்த ஆசையால் விசுவாசத்தை விட்டு மோசம் பொய் அனேக வேதனைகளால் உருவக் குத்திக்கொள்ளுகிறார்கள்.

முத்தத்தால் காட்டிக்கொடுத்தான்:

அன்பின் அடையாளம் முத்தம் அதைக்கொண்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இன்று நாமும் இயேசுவோடு கிறிஸ்தவர்களாக இருந்தும், அவரை காட்டிக் கொடுத்துக்கொண்டும், சிலுவையில் அறைந்துக்கொண்டும் இருக்கிறோம்.

வருந்தினான், மனந்திருந்தவில்லை:

வருத்தப்பட்டான், மனந்திருந்தவில்லை, இயேசுவிடம் வர வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றவில்லை. தண்டனையை தானே முடிவு செய்துக்கொண்டான், இயேசுவோ அவனையும் சிலுவையில் மன்னிக்கவே சித்தங்கொண்டார்.

சிலுவை பாதையில் நாம் யார்?



கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, March 30, 2011

காலை மன்னா

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளே ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன், கடந்த மூன்று தினங்களாக   எனது இணையதள இணைப்பு செயல் படவில்லை, கர்த்தருடைய  கிருபையில் நேற்று முதல் சரியாக செயல் படுகிறது, எனவே இந்த காலை வேளையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன்.



இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட திரு வசனம். சங்கீதன்.10 :1

 கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்


நம் வாழ்க்கை கேள்விகள் நிறைந்தது, என்? எப்படி? எது? யார்? இதுப்போன்ற   அனேக கேள்விகளை தினந்தோறும் கேட்கிறோம். கேள்விகள் இல்லாமல் தெளிவுகள் கிடைக்காது. எனவே கேள்விகள் என்பது ஒரு வகையில் நல்லதே. பள்ளிக் கூடத்தில் கேள்வி கேட்கிற மாணவர்களின் ஆர்வத்தை ஆசிரியர்கள் பாராட்டுவதற்கு காரணம் அதுதான்.

அதே நேரத்தில் கேள்வி கேட்பதற்கு வரம்புகள் இருக்கிறது, தேவையற்ற, அறிவீனமான் கேள்விகளை யாருமே விரும்ப மாட்டார்கள், இடம் பொருள் ஏவல் அறிந்து தான் கேள்விகளை கேட்க வேண்டும்,

நம்முடைய தியான பகுதிக் கூட ஒரு கேள்விதான்.சங்கீதத்தை எழுதிய ஆசிரியர் கடவுளை நோக்கி இரண்டு கேள்விகள் கேட்கிறார்.

1 . கர்த்தாவே என் தூரத்தில் நிற்கிறீர்?
2 . ஆபத்து நேரிடும் சமையங்களில் என் மறைந்திருக்கிறீர்?

இந்த இரண்டு கேள்விகளுமே, நம் வாழ்விலும் ஒரு முறையாவது கடவுளை நோக்கி கேட்டிருப்போம், அப்படியானால் கடவுள் தூரத்தில் நிற்பதும், ஆபத்து நேரத்தில் மறைந்துக் கொள்வதும் உண்மைதானா?

சகிக்க  முடியாத துன்பங்களும் தேவையற்ற பிரச்சனைகளும், அனாவசியமான எதிர்ப்புகளும் எதிரிகளின் சூழ்சிகளும் நம்மை சூழ்ந்துக் கொள்ளும்போதெல்லாம் இந்த கேள்வியை கடவுளிடம் கேட்கிறோம்.

ஏன் இயேசுகிறிஸ்துவே கூட சிலுவையின் மரணப் போராட்டத்தில் கடவுளை நோக்கி அபயமிட்டது இது தானே? என் கடவுளே என் கடவுளே என் என்னை  கை விட்டீர் என்று கதறினாரே. அப்படியானால் கடவுள் தன் சொந்த குமாரனையே கை விட்டவர் நம்மை கைவிடுவது அவருக்கு சாதாரணம் என்றெல்லாம் கூட நமக்கு தோன்றுகிறது.

நம் ஆண்டவருக்கே இந்த நிலை என்றால் நமக்கு?

ஒரே ஒரு உண்மையை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும் ஆண்டவர் இந்த உலகத்தில் கை விட்டது ஒரே ஒருவரை தான், அந்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டும் தான், அவரைக்கூட ஏன் கை விட்டார் என்றால், அவரை கை விட்டால் தான், அவர் மரித்தால் தான், அவரது ரத்தம் மண்ணில் சிந்தப்பட்டால் தான் நாம் காப்பாற்றபடுவோம் , நம் ஜீவன் காக்கப்படும்,



அப்படியானால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கை விட்டத்தின் நோக்கம் நம்மை காக்க, நம்மை அரவணைக்க, நம்மை இவ்வுலகில் எல்லா எதிர்ப்புகளிலிருந்தும் காப்பாற்ற, அப்படியானால் அவர் எப்படி தூர இருப்பார்? நமக்கு மறைந்துக் கொள்வார், தன சிநேகிதனுக்கு துன்பம் வந்தால் தூர ஓடுவதும் மறைந்துக்கொள்வதும் மனித சுபாவமே தவிர நம் இறைவனின் குணமல்ல.

இந்த கேள்விகள் எல்லாம் நம் துன்பத்தின் அழுத்தம் தாங்க முடியாமல் கதறுவதே தவிர சத்தியமல்ல. இதே சங்கீதத்தின் 17  வது வசனத்தில் சங்கீதக்காரன் தெளிவாக கூறுகிறார், வேண்டுதலை கேட்டிருக்கிறீர், அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர் என்று.

அப்படியானால் அவர் தூர இருப்பவரல்ல நம் இருதயத்தின் பக்கத்திலிருந்து நம்மை பெலப்படுத்துபவர். நம்மை காக்க தன் சொந்தக்  குமாரனையே கை விட்டவர் நம்மோடிருக்கிறார்.

சமாதானமாய் இந்நாளை துவங்குவோம் அவர் நம் இதயத்தின் பக்கம் நிற்கிறார் நம்மை காக்க. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, March 26, 2011

அன்பான இறைவன் (மாதர் பகுதி)

இந்த புதிய நாளிலே, மீண்டும் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தோழி! அன்பான இறைவன் அழகான இந்த உலகத்தில் நாம் பார்த்து இரசிக்கும்படியாய், அறிய பலக்  காரியங்களை வைத்திருக்கின்றார்.

கவலை என்னும்  கண்ணாடியை அணிந்துக் கொண்டு பார்ப்பதினால், இந்த அழகெலாம் நம் பார்வைக்கும் மறைந்துவிடுகின்றன. பொழுது புலர்ந்து வரும் அழகான ஒளிக்கற்றை, துவங்கி அனைத்தையுமே அவர் அற்புதமாகவும், ஆச்சரியமாகவும் அமைத்துள்ளார்.



அவரது இந்த அழகிய உலகில் , அதாவது நமக்காக அவர் பார்த்துப்பார்த்து உருவாக்கின இந்த உலகில், நம்மையும் அழகான உயிர்த்துளியாய் உலாவும்படி செய்திருக்கிறார்.

அநேக வேளைகளிலே, அழகாக ஆசீர்வாதமாக படைக்கப்பட்டிருக்கின்ற நாம், அவரது படைப்பாகிய இந்த உலகை எவ்வளவு மாசுபடுத்தி வைத்திருக்கிறோமோ, அதைப்போல, கோபம், எரிச்சல், பயம், திகைப்பு, அவிசுவாசம் போன்ற பல காரியங்களால் நம்மை நாமே கெடுத்துக்   கொள்ளுகிறோம்.

தோழி சங்கீதக்காரன் தாவீது சங்கீதம் 8 :9 ல்  "எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியெங்கும்
 எவ்வளவு மேன்மையானது"- என்று வியந்துள்ளார். அநேக சங்கீதங்களில், சங்கீதம் முழுமையிலும், கர்த்தரின் செயல்களைக்குறித்து வியந்து போற்றுகின்றான்.

அன்புத்  தோழி ஆண்டவர் அனைத்தையும் அழகாகவே படைத்தார், அனைத்தையும் நமக்காகவே படைத்தார், அது நல்லதென்றும் கண்டார். ஆனால் நாம்தான் அநேக வேளைகளில்," நம்மை ஏன்தான் படைத்தாரோ, என்னால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை, என்ற  எதிர்மறையான   எண்ணத்தில், ஏமாற்றத்துடன் வாழ்கின்றோம்.

தோழி! ஆண்டவர் அனைத்தையும் நேர்த்தியாய் செய்கிறவர், நம்மையும் ஒரு நோக்கத்துடனே படைத்திருக்கின்றார், அவர் நம்மை உருவாக்கினத்தின் நோக்கங்கள், ஒவ்வொரு நாளும் அழகாய் நிறைவேறுவதை இரசனையுடன் கவனித்திருப்போம். இரக்கமுள்ள இறைவன், கிருபையாய் நமக்கு தந்திருக்கும் இந்த இகபர வாழ்க்கை மிகவும் அழகானதே, அற்புதமானதே.


வாழ்வு தந்த இறைவனை நோக்குவோம் தோழி! வாழ்க்கையை இரசிப்போம். இறைவன் நம்மை அழகானவர்களாய், அற்புதமானவர்களாய், ஆசீர்வாதமானவர்களாய், இறைமகன் இயேசுவின் அன்பை நம்மில் பிரதிபலிப்பவர்களாக வாழும்படியாய் அன்புடன் அழைக்கின்றார்.



ஒவ்வொரு நாளும் முடியும்போது இறைவனிடம் நாம் சேர ஒரு படிக்கட்டை ஏறி முடிக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தின் வழிப்பிரயானத்தில், காணும் அனைத்தையும் இரசனையுடன் நோக்குவோம். வாழ்வின் வழியில் இறைவன் நமக்கென வைத்திருக்கும் அற்புதங்களையும், அதிசயங்களையும் மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்வோம். வாழ்க்கைப்பயணம் வலுமிக்கதாகும். வலுவிழந்த நேரங்களில் அவரை முழுமையாய் பற்றிக்கொள்வோம். நம்மையே அவரிடம் முழுமையாய் அர்ப்பணிப்போம், அவரே நம்மை ஆசீர்வாதமாய் நடத்தி செல்வார். மீண்டும் சந்திக்கிறேன் தோழி.

அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews