WORD OF GOD

WORD OF GOD

Sunday, July 28, 2013

அழிவில்லாத ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்வோம்..

அன்பிற்கினிய உடன் விசுவாசிகளுக்கு என் இனிய, அன்பான, காலை வணக்கங்கள்.. நமதாண்டவரும், நம் ரட்சகருமான இயேசுகிறிஸ்து, தன் சீடர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார், அந்த ஜெபம்தான் நாம் இன்றளவும் ஆராதனைகளில் பயன்படுத்திவருகிற, பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே என்று தொடங்கும் அற்புதமான ஜெபம். ஜெபத்தை கற்றுக்கொடுத்த பிறகு தன் சீடர்களுக்கு ஜெபிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த,

லூக்கா.11:9-10 ல்.. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்டும்.ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். அப்படியானால் நாம் நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற அவரை நோக்கி கேட்க வேண்டும், அவரிடத்தில் தேட வேண்டும், அவரை தட்ட வேண்டும். அதுமாத்திரமல்ல கேட்கிற எவனும் பெற்றுக் கொள்வான் என்கிறார். நாம் நன்மைகளை பெற ஒரே வழிதான் அது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான்.

அதற்கு சிறந்த உதாரனம் ஆபிரகாம், கடவுள் அழைத்தவுடன், அவருக்கு செவி கொடுத்து, அவரை நம்பி புறப்பட்டதன் பலன், பெரிய செல்வந்தனாகவும், பெரிய சீமானாகவும் ராஜ்ஜியங்களை வெல்லும் ஆற்றல் கொண்ட தலைவனாகவும் உருவானான். ஆனால் அவனோடிருந்த லோத்துக்கு அந்த விசுவாசம் இல்லை, ஆதியாகமம்.13ம் அதிகாரத்தில் செல்வத்திற்காக, ஆபிரகாமை விட்டு பிரிந்து, மாபெரும் வளம் பொருந்திய, கர்த்தரின் தோட்டம் போலிருந்த சோதாம் கொமாரவை கண்டு அங்கே குடியேறினான். ஆபிரகாமோ அவன் விட்டு சென்ற வளம் குறைந்த பகுதிகளில் குடியிருந்தான். ஏன்?,. அவனுக்கு தெரியும் நன்மைகள் கர்த்தரிடத்திலிருந்துதான் வருமே தவிர, வேறு எவ்வழியிலிருந்தும் வராது. கர்த்தரை கேட்டால் போதும் அவன் வீடு செல்வத்தால் நிறையும். ஆம் அவன் வீடு செல்வத்தால் நிறைந்தது. இடத்தை, வளத்தை, செல்வத்தை முக்கியமாய் தன் அறிவை நம்பி போன லோத்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நிர்கதியாய் ஓடி வந்தான்.

எனவேதான் பவுல் கொலோசேயர்.3;6-7 ல்
6. ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
7. நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.

இயேசுவில் வேரூன்றி, அவர் மேல் கட்டப்பட்டு, அவருக்குள் நடக்க வேண்டும் என்கிறார்.. அது எப்படி? அடுத்த வசனத்தில் பதில் கொடுக்கிறார்..

8. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

கொலோசெயர் 2:8 புது மொழி பெயர்ப்பு
8 பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள்.

ஆம் அன்பானவர்களே, அவருக்குள் நடப்பது என்றால் அதன் அர்த்தம் என்ன தெரியுமா? இவ்வுலக (பிசாசின்) வழிகளாகிய லெளகிக ஞானம் அதாவது மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கிற தத்துவங்கள், தந்திரம், போன்றவைகளை விட்டுவிட வேண்டும் என்பதே.. ஆம் அவர் இந்த பிரபஞ்சத்தின் எல்லா அதிபதிகளை காட்டிலும் மேலானவர்.அவரை மட்டுமே நம்புவேன் என்று வாக்குறுதி கொடுத்து பாவத்துக்காக செத்து அவர் காட்டிய வழியாகிய நீதியின் பாதையில் நடக்க ஞானஸ்நானம் பெற்று உயிர்த்தெழுந்தவர்கள். இவ்வுலகம் அதன் அதிகாரம், அதின் ஞானம் அனைத்தும் பொய் அவரை நம்புவதே மெய் என்பதற்கு அடையாளமாக, மூன்றே நாளில் மரணத்தை ஜெயித்தார். ஞானமாய் சிந்தித்து, பொய் சாட்சிகளை ஏற்பாடு செய்து அவரை ஒழித்துவிட்டோம் என்று நிம்மதியாய் இருந்த கூட்டம் மூன்றே நாளில் இருந்த தடம் தெரியாமல் ஓடிவிட்டார்கள். இனி எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். ஆம்  நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; என் அறிவில் வராது, என் பலத்தில் வராது, என் திட்டத்தில் வராது, நான் நம்புகிறவர்களிடத்திலிருந்து வராது.. கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.. ஆம் அன்பானவர்களே, அவரை நம்புவோம், அவரில் நடப்போம், அவரை கேட்போம்.. உண்மையான அழிவில்லாத ஆசீர்வாதங்களை பெற்று மகிழ்வோம்.

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்போம். (2கொரி.5:6) ஆமேன்....



கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...



No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews