WORD OF GOD

WORD OF GOD

Sunday, July 14, 2013

வாருங்கள் உலகை கலக்குவோம்!!..

அன்பின் சகோதர சகோதரிகளே, தாவீது தேவாலயத்தை கட்ட தீர்மானித்தபோது, ஆலயத்தை கட்டும் பொறுப்பை சாலமோனிடம் ஒப்படைக்க கடவுளே சித்தம் கொண்டார்.கடவுள் தன் மகன் சாலமோனை கொண்டு இதை செய்வார் என்று தாவீது அறிந்தவுடன், அந்த பொறுப்பை தன் மகன் சாலமோனிடம் கொடுத்தான்

1நாளாகமம்.22:11-13 ல் அதை தாவீதே ஒப்புக் கொள்ளுகிறார்.

(வசனங்கள் பொது மொழிபெயர்ப்பிலிருந்து பதிவேற்றியுள்ளேன், நீங்கள் உங்கள் கரத்தில் இருக்கும் வேதாகமத்தை கொண்டு ஒருமுறை படித்து புரிந்துக் கொள்ளுங்கள்)

 (11 தாவீது மேலும், “இப்போது மகனே, கர்த்தர் உன்னோடு இருக்கட்டும், உன் செயல்களில் வெற்றி கிடைக்கட்டும். உனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தால் ஆலயம் கட்டுவாய். அவர் சொன்னது போலவே கட்டாயம் நீ செய்வாய்.
 12 கர்த்தர் உன்னை இஸ்ரவேலின் அரசனாக்குவார். ஜனங்களை வழி நடத்தவும் கர்த்தருடைய சட்டங்களை மதித்து கட்டுப்பட்டு நடக்கவும் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும் தேவனாகிய கர்த்தர் உனக்கு வழங்கட்டும். 
13 நீ வெற்றிமிக்கவனாய் இருப்பாய். இஸ்ரவேலுக்காக கர்த்தர் மோசேயிடம் கொடுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் நீ கவனமாகக் கீழ்ப்படிய வேண்டும். பலமாகவும், தைரியமாகவும் இரு. பயப்படாதே)

 ஆனால் எல்லா தந்தைக்கும் ஒரு பெலவீனம் உண்டு, அது யாதெனில் தன் பிள்ளைகளுக்குள் எவ்வளவு பெரிய ஆற்றலும் திறமைகளும் இருந்தாலும், அவர்கள் வயது ஏறினாலும், அவர்களை இன்னும் தங்கள் குழந்தைகளாகவே பாவிப்பர், அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்க பயப்படுவர். இதே போன்றதொரு பயம் தாவீதிற்கும் வந்துவிட்டது, 

.ஆனாலும், தன் மகன் சாலமோன் அதை சாதிப்பாரா என்ற அச்சம் அவருக்குள் இருப்பதை, 1நாளாகமம்.29:1ல் குறிப்பிடுகிறார்.

29:1 அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது, “என் மகன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு.

எனவே இந்த மனக்குழப்பத்தில் இருந்து தாவீது தப்பிக்க எடுத்த முடிவு, அதே 1நாளாகமம்.29:10 முதல் 12 வரை வசனங்களில் இடம் பெற்றுள்ளது, ஆம் அந்த முடிவு கடவுளை நோக்கி ஜெபிப்பது.

தாவீதின் அழகான ஜெபம்

10 பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது:

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே,
    எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக!
11 மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை.
    ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை.
கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது.
    நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே.
12 செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும்.
    நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர்.
உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது!
    எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!

அன்பானவர்களே, தன் மகனை அழைத்து அவன் அறிவுரை சொல்லவில்லை, யாராவது பார்த்துக் கொள்ளுங்கள் என்று யாரிடத்திலும் தன் மகனை ஒப்புக்கொட்டுக்கவில்லை, அவன் எடுத்த ஒரே முடிவு தன் பிரச்சனையை கடவுளிடத்தில் கூறுவதுதான். ஏனென்றால் கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை, இதை தெளிவாக தாவீது கூறுகிறார் எவரையும் மேனமைப்படுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். ஆம் பிரியமானவர்களே, சாலோமோன் இளைஞன், இந்த வேலையை செய்யும் அறிவு இல்லாதவன். ஆனால் யாரையும் மேனமைப்படுத்தவும், பலப்படுத்தவும் நம் கர்த்தரால் ஆகும்.

எனவே உங்கள் பிள்ளைகள் சாதிப்பார்களா என்கிற அச்சம் உங்களுக்குள்ளும் இருக்கிறதா? முழங்கால் படியிடுங்கள் நம் சர்வ வல்லவரிடம் சொல்லுங்கள்.

 உங்களை குறித்தே என்னால் ஆகுமா? நான் சாதிப்பேனா? என்று அச்சம் கொள்ளுகிறீர்களா? முழங்காலில் நில்லுங்கள், உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் மேனமைப்படுத்தவும், பலப்படுத்தவும் நம் கர்த்தரால் முடியும்.

சாதாரனமான, பாமரர்களான தன் சீடர்களை கொண்டே இவ்வுலகை கலக்கினவர், இன்று உங்களை கொண்டும் இவ்வுலகை கலக்குவார். ஆமேன்.




கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews