அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய காலை ஸ்தோத்திரங்கள், இன்று ஞாயிற்றுக் கிழமை, ஆலயத்திற்கு பரபரப்பாய் ஆயத்தமாகிற் நேரம், சிலர் ஆராதனை முடித்தபின் தான் பார்ப்பீர்கள், ஆராதனைக்கு செல்லும் அல்லது ஆராதனை முடிந்து வந்த உங்களிடம் ஒரு கேள்வி நாம் ஆராதனையில் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்கிற நேரம் எது?.. உங்கள் பதிலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..
ஜெபம்: நாம் ஆசீர்வாதத்தை கேட்கிற நேரம்
ஆராதனை முறைமை&பாடல் & துதி நேரம்: நாம் பெற்றுக் கொண்ட ஆசீர்வாதத்திற்கு நன்றி கூறுகிற நேரம்
போதகர் ஆசீர்வாதம் கூறுகிற நேரம்: நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்தை உறுதி செய்கிற நேரம்
அப்படியானால் அசீர்வாதம் பெற்றுக் கொள்ளுகிற நேரம் எது?
சங்கீதம்.27:11 ல் தாவீது கூறுவது கர்த்தாவே, உமது வழியை எனக்கு போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும் என்பதே,
அதாவது எதிரிகளின் நடுவே சூழப்பட்டிருக்கிற தாவீது, அவர்களுக்கு முன்பாக அவன் வாழ்க்கை சிற்ப்பாய் அமைய எனக்கு போதித்து நடத்தும் என்கிறார், கர்த்தருடைய வார்த்தைதான் நாம் வெற்றியுடன் வாழ வழிக்காட்டுகிறது. அப்படியானால் நாம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிற நேரம் என்பது கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அதின்படி வாழ முடிவெடுக்கிற நேரம் என்பது தெளிவாகிறது அல்லவா?
எனவேதான் ஆண்டவர் லூக்கா.10:38-42 வரை உள்ள வசனங்களில், தன் பாதத்தருகே அமர்ந்து கர்த்தருடைய வார்த்தையை கேட்கிற மரியாளை நல்ல பங்கை தெரிந்துக் கொண்டாள் என்று கூறி, மார்த்தாளை எச்சரிக்கிறார், ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிற காரியம் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை செய்யாமல், அவருடைய வர்த்தையை கருத்தாய் கெட்க வேண்டும் என்பதும் அவருடைய வார்த்தையில் வாழ்ந்திட வேண்டும் என்பதே.
இன்றைய தியானப் பகுதியாகிய, கொலோசேயர்.1:21-29 வரை வசனங்களில், 2 முறை அதாவது 23 மற்றும், 26ம் வசனங்களில், நான் ஊழியக்காரனாக கடவுளால் தெரிந்துக் கொள்ளப்பட்டதே அவருடைய வார்த்தையை அறிவிப்பதற்காகத்தான் என்கிறார்.. ஆனால் அவருடைய வார்த்தையை அறிவிப்பது அவ்வளவு சுலபமல்ல, 24ம் வசனத்தில் உங்கள் நிமித்தம் அனுபவிக்கிற பாடுகளில் சந்தோஷம் அடைகிறேன் என்கிறார், அப்படியானால் கர்த்தருடைய வார்த்தையை அறிவிப்பது அவ்வளவு சிரமமா? இல்லையே.. நாம்தான் கேட்கிறதற்கு ஆவலாய் இருக்கிறோமே அப்படியிருக்க கர்த்தருடைய வார்த்தையை அறிவிப்பது எப்படி சிரமமாகும் என்கிறீர்களா?!!!!
அன்பானவர்களே,, 27ம் வசனத்தில் பவுல் கூறுகிறார் கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாய் உங்களுக்குள் இருக்கிறார் என்பதே கர்த்தருடைய வார்த்தை என்கிறார். இதை நாம் கேட்டிருக்கிறோமா??? இயேசுவானவர் நமக்குள்ளே மகிமையின் நம்பிக்கையாய் இருக்கிறார்... இல்லை நாம் கேட்டதில்லை, இயேசு பரலோகத்தில் இருக்கிறார், அல்லது இந்த ஆலயத்திலிருக்கிறார், அல்லது என்னோடு இருக்கிறார், அல்லது இயேசு அழைக்கிறார் என்ற செய்தியை தானே கேட்டிருக்கிறோம், ஆம் இதை அறிவிப்பது சுலபமுமல்ல இதை நம்ப நாம் தயாராகவும் இல்லை.
இயேசுவை எங்கெல்லாம், தெடுகிறோம், கோவிலில், காணிக்கையில், ஊழியக்காரனிடத்தில், உபவாசக்கூட்டங்களில், நற்செய்தி கூட்டங்களில், ஆனால் நமக்குள்ளிருக்கிறார் என்பதை எத்தனை பேர் நம்புகிறோம்? இதை நம்பினால் நமக்குதான் பிரச்சனை.. ஆம் உண்மைதான், பவுல் 28ம் வசனத்தில் கூறுகிறார், கிறிஸ்து வாசமாயிருக்கிற எந்த மனுஷனையும் அவருக்குள் தேறினவர்களாய் அவர்களுக்கு புத்தி சொல்லுகிறோம். நமக்குள் இருக்கிறார் என்பதை நாம் நம்பினால், அவருக்குள் தேறினவர்களாக வேண்டும், எனவே நாம் அவரை வெளியே தேடவே விரும்புகிறோம், அவர் நமக்குள் இருக்கிறார் என்ற சத்தியத்தை கேட்டுக் கொண்டால், நான் இனி புகைப்பிடிக்க முடியாது, மது அருந்த முடியாது, பொய் சொல்ல முடியாது, புரட்டு அரசியல் செய்ய முடியாது, விபச்சாரம் செய்ய முடியாது, யாரையும் ஏமாற்ற முடியாது, நான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்று எண்ண முடியாது, முன்மாதிரியாய் இருக்கவேண்டும், எனவேதான் அவரை வெளியே பார்க்க விரும்புகிறோமே தவிர நமக்குள்ளே பார்க்க விரும்புவதில்லை.
ஆனால் பவுலோ 29ம் வசனத்தில் அதை புரிய வைக்க, அவருடைய பெலத்தினால் போராடி, பிராயசப்படுகிறேன் என்கிறார். எத்தனை ஆச்சரியமான மனிதர் இவ்வூழியத்தில் தன்னையே இழந்தாரே.. அவர் நம்க்குள் இருக்கிறார் என்பதை புரிய வைக்க.. அன்பானவர்களே..
நமதாண்டவர், ஆலயத்தில் வாசம் செய்யவோ, ஒரு ஊழியக்காரனின் பிடியில் சிக்கியிருக்கவோ, ஒரு நற்செய்தி கூட்டத்தில் அற்புதங்களை செய்யவோ, ஒரு உபவாச கூட்டத்தில் தன் மகிமையை காட்டவோ மாத்திரம் வரவில்லை, அவர் நமக்குள் பிரவேசித்து நம்மில் செயலாற்ற தன் ஜீவனை சிலுவையில் நமக்காய் அற்பணித்து உயிர்த்தெழுந்திருக்கிறார். இதை உணர்ந்து இந்த அறிவில் வளர்வதே கடவுள் எதிர்பார்க்கும் பிரியமான காரியம்.. இன்னும் புரியாதவனை போல அவரை வெளியே தெடி நான் தப்பித்துக்கொள்ள வகை தேடினால் அழிவை தேடி அலைகிறவர்களில் நானே முதன்மையானாவன்..
இறைவா..
என்னில் இருக்கிற உம்மில் வளர.. பெலன் கொடு
என் சுபாவ பாவங்களில் என்னை தடுத்திடு,
உமது வார்த்தையை அசட்டை செய்யமல் கேட்கும் செவியை தந்திடு..
உமது பாதையில் நடக்கும் அறிவை ஈந்திடு..
மன்னிக்கப்பட்ட நான் மன்னிக்கப்பட்டவனாகவே வாழ இன்னும் மன்னித்திடு..
அழிவின்றி என்னை பரலோகம் சேர்த்திடு.. ஆமேன்.
You are invited to follow my Christian blog
ReplyDelete