நாம் கண்டுக் கொண்ட உயர்வை போன்று, பல மடங்கு உயர்வை நம் பிள்ளைகள் பெற வேண்டும். ஆனால் பொதுவாக இந்தியாவில், அதிலும் குறிப்பாய் திராவிடர்களான தென்னிந்திய பிள்ளைகளிடத்தில் அதிகமாக தென்படுகிற ஒரு குணம் தாழ்வு மனப்பான்மை. தமிழர்களிடம் இது பன்மடங்கு அதிகம். "போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து", "இருப்பதைவிட்டு பறப்பதை பிடிக்காதே", என்றெல்லாம் சொல்லப்படும் பழ மொழிகள் தாழ்வு மனப்பான்மையின் ஆணிவேராகவே நான் கருதுகிறேன்.
மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கி, நிறைவாய் ஒரு வீடு கட்டி, சிக்கனமாய் வாழ்க்கை நடத்துவது போதுமானதா? அப்படியானால் உயர்ந்தவன் உயர்ந்தவனாகவே இருக்க வேண்டும், தாழ்ந்தவன் தாழ்ந்தவனாகவே இருக்க வேண்டுமா? ஆளுகை, உலக வர்த்தகம்,
போன்றவையெல்லாம் யாரோ செய்துக் கொண்டிருக்க நாம் இதுவே போதும் என்று உட்கார்ந்திருக்க வேண்டுமா?
கர்த்தர் பட்சபாதம் உள்ளவரல்லவே.(அப்போஸ்தலர்.10:34).
உன்னை கன்மலையின் மேல் உயர்த்துவேன் என்று சொன்னவரல்லவா.(சங்கீதம்.27:5)????
நீ கையிட்டு செய்கிற காரியத்தை வாய்க்க செய்வேன்.(உபாகமம்.28:8) என்கிறாரே.
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19.
என்று பவுல் தெளிவாய் ஆண்டவர் ஐசுவரியம் தருவார் என்கிறாரே.
எனவே பிள்ளைகளை வளர்க்கும்போதே, இந்த இறை வார்த்தைகளில் விசுவாசம் கொண்டவர்களாய் வளர்க்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அவரை நம்புகிற யாவரையும் தேவன் மேலாய் உயர்த்துவார் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். உலகின் அனைத்து உயர்வுகளையும் எட்டிப்பிடிக்கும் ஆற்றல் அவர்களுக்குள் இருப்பதை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும். தாவீதின் வாழ்வையும், மோசேயின் வாழ்வையும், யோசேப்பின் வாழ்வையும் கற்றுக் கொடுங்கள்.
நமது சிறுவர் கொண்டாட்டம் ஊழியத்தின் நோக்கமும் இதுதான், விசுவாச பொறியை அவர்கள் உள்ளத்தில் விதைத்தால் போதும். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு (பிலிப்பியர்.4:13) என்ற வசனம் அவர்கள் வாழ்வில் எளிதில் சாத்தியமாகும்.
சிறு பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிற ஆண்டவர் நம் வீட்டு சிறுவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து இந்த மேலான வாழ்வருளி காப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள
No comments:
Post a Comment