கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள். இன்றைய தியான வசனம்.சங்கீதம்.27 .10 ௦
“ என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.”
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வை துவங்குவது, தன் பேற்றோரிடமிருந்துதான் , எனவே தான் பெற்றோர்களை நம் முன்னோர்கள் மிக பெருமையாக சொல்லி வைத்துள்ளனர், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று.
காரணம் நம் வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமே அவர்கள் தான் எனவேதான் நாம் அனைவருமே நாம் வாழும் வரை நம் பெற்றோர்கள் நம்மோடு வாழ வேண்டும் என்று ஆசைப் படுகிறோம், அதே நேரத்தில் அவர்கள் முதியவர்களாய் மாறிவிடுகிற காலத்தில் நம் அன்பிலும், நம் பாதுகாப்பிலும் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பலர் அதை பாரமாக கூட நினைக்கிறார்கள், அதெல்லாம் கல் நெஞ்சத்தின் ஒரு அடையாளம். ஆனால் இந்த தியானப்பகுதி சொல்லவருவது ஒரு செய்திதான் அது யாதெனில் நம் பெற்றோர் கூட நம்மை கை விடுகிற காலம் உண்டு, காரணம் அவர்கள் முதியவர்களான பிறகு நாம் பாதுகாக்கிற நிலைக்கு வருகிறார்கள்.
அக்காலத்தில் நமக்கு வழி காட்ட, நம்மை அன்போடு, கரிசனையோடு தாங்க, ஒரு கரம் தேவைப்படுகிறது. அந்த கரத்தைப் பற்றிதான் சங்கீதக்காரன் கூறுகிறார், கர்த்தர் என்னை சேர்த்துகொள்வார் என்று.
நம் பணியின் நிமித்தமாக, நம் பெற்றோரை பிரிந்திருக்கலாம், மரணம் பெற்றோரை பிரித்து வேதனையோடு இருப்பவர்கள் இருக்கலாம், முதுமையின் நிமித்தமாக பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏக்கத்தோடு இருக்கலாம், ஆனால் கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
அவர் நம்மை எக்காலத்திலும் கை விடாதவர். நமக்கு அவரே துணையாளர். துணிவாய் இந்நாளை துவங்குவோம்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment