நமதாண்டவராகிய இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஸ்தோத்திரம்.
1பேதுரு.2 :௨௧
1பேதுரு.2 :௨௧
இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.
இயேசுகிறிஸ்து நமக்கு என்ன மாதிரியை வைத்து போயிருக்கிறார் என்று பேதுரு நமக்கு கூறுகிறார்.
இயேசு ஆண்டவர் பாடுபடுவதற்காக, இந்த உலகில் பிறந்தார். பாடுகளை ஏற்றுக்கொண்டார். மரித்தார், உயிர்த்தார். அவருடைய அழைப்பு நமக்கும் இன்று என்ன அறைக்கூவல் விடுக்கிறதேன்றால், பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு ஆண்டவருடைய பாடுகளில் பங்காளிகளாக வேண்டும்.
கடவுளுடைய அழைப்பும் அதற்குதான் நம்மை ஏவுகிறது. கிறிஸ்தவ வாழ்வு என்பது, நாம் நினைப்பது போல சுகபோக வாழ்வு மட்டுமே நிறைந்ததல்ல அனேக நேரங்களில் துன்பங்களை துயரங்களை, பாடுகளை, அனுபவிக்க வேண்டும். சிலுவையின் வழி, பாடுகளின் வழியாகும். இயேசு ஆண்டவர் தமது சீடர்களை பார்த்து கூறுவது, ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால், தன்னைத்தான் வெறுத்து, தன சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் பின்பற்ற வேண்டும்.
ஆகவே சிலுவையை நாம் தினமும் சுமக்க வேண்டும், யோ.12 :24 : கோதுமை மணி நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் மிகுந்த பலன் கொடுக்கும். கிறிஸ்தவ வாழ்வு என்பது மலர்கள் மீது நடப்பதல்ல, முட்கள் மீது நடப்பது. இயேசுவின் சீடர்கள் இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள்.
ஆகவே நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நடந்து சென்ற அடிச்சுவடுகளை பின்பற்றி பாடுகளை ஏற்றுக்கொண்டு, சிலுவை வழி நமது வழி என்பதனை உலகிற்கு காண்பிக்கவும், சாட்சியாக வாழவும் சிலுவை சுமந்த நமது இரட்சகர் நம்மை வழிநடத்துவாராக. ஆமென்.
இயேசு ஆண்டவர் பாடுபடுவதற்காக, இந்த உலகில் பிறந்தார். பாடுகளை ஏற்றுக்கொண்டார். மரித்தார், உயிர்த்தார். அவருடைய அழைப்பு நமக்கும் இன்று என்ன அறைக்கூவல் விடுக்கிறதேன்றால், பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு ஆண்டவருடைய பாடுகளில் பங்காளிகளாக வேண்டும்.
கடவுளுடைய அழைப்பும் அதற்குதான் நம்மை ஏவுகிறது. கிறிஸ்தவ வாழ்வு என்பது, நாம் நினைப்பது போல சுகபோக வாழ்வு மட்டுமே நிறைந்ததல்ல அனேக நேரங்களில் துன்பங்களை துயரங்களை, பாடுகளை, அனுபவிக்க வேண்டும். சிலுவையின் வழி, பாடுகளின் வழியாகும். இயேசு ஆண்டவர் தமது சீடர்களை பார்த்து கூறுவது, ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால், தன்னைத்தான் வெறுத்து, தன சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் பின்பற்ற வேண்டும்.
ஆகவே சிலுவையை நாம் தினமும் சுமக்க வேண்டும், யோ.12 :24 : கோதுமை மணி நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் மிகுந்த பலன் கொடுக்கும். கிறிஸ்தவ வாழ்வு என்பது மலர்கள் மீது நடப்பதல்ல, முட்கள் மீது நடப்பது. இயேசுவின் சீடர்கள் இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment