1990 - 2011
Largest Earthquakes | Deadliest Earthquakes | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
Year | Date | Magnitude | Fatalities | Region | Year | Date | Magnitude | Fatalities | Region |
2011 | 03/11 | 9.0 | 20896 | Near the East Coast of Honshu, Japan | 2011 | 03/11 | 9.0 | 20896 | Near the East Coast of Honshu, Japan |
2010 | 02/27 | 8.8 | 507 | Offshore Maule, Chile | 2010 | 01/12 | 7.0 | 316000 | Haiti |
2009 | 09/29 | 8.1 | 192 | Samoa Islands region | 2009 | 09/30 | 7.5 | 1117 | Southern Sumatra, Indonesia |
2008 | 05/12 | 7.9 | 87587 | Eastern Sichuan, China | 2008 | 05/12 | 7.9 | 87587 | Eastern Sichuan, China |
2007 | 09/12 | 8.5 | 25 | Southern Sumatera, Indonesia | 2007 | 08/15 | 8.0 | 514 | Near the Coast of Central Peru |
2006 | 11/15 | 8.3 | 0 | Kuril Islands | 2006 | 05/26 | 6.3 | 5749 | Java, Indonesia |
2005 | 03/28 | 8.6 | 1313 | Northern Sumatra, Indonesia | 2005 | 10/08 | 7.6 | 80361 | Pakistan |
2004 | 12/26 | 9.1 | 227898 | Off West Coast of Northern Sumatra | 2004 | 12/26 | 9.1 | 227898 | Off West Coast of Northern Sumatra |
2003 | 09/25 | 8.3 | 0 | Hokkaido, Japan Region | 2003 | 12/26 | 6.6 | 31000 | Southeastern Iran |
2002 | 11/03 | 7.9 | 0 | Central Alaska | 2002 | 03/25 | 6.1 | 1000 | Hindu Kush Region, Afghanistan |
2001 | 06/23 | 8.4 | 138 | Near Coast of Peru | 2001 | 01/26 | 7.7 | 20023 | India |
2000 | 11/16 | 8.0 | 2 | New Ireland Region, P.N.G. | 2000 | 06/04 | 7.9 | 103 | Southern Sumatera, Indonesia |
1999 | 09/20 | 7.7 | 2297 | Taiwan | 1999 | 08/17 | 7.6 | 17118 | Turkey |
1998 | 03/25 | 8.1 | 0 | Balleny Islands Region | 1998 | 05/30 | 6.6 | 4000 | Afghanistan-Tajikistan Border Region |
1997 | 10/14 | 7.8 | 0 | South of Fiji Islands | 1997 | 05/10 | 7.3 | 1572 | Northern Iran |
1997 | 12/05 | 7.8 | 0 | Near East Coast of Kamchatka | 1997 | ||||
1996 | 02/17 | 8.2 | 166 | Irian Jaya Region Indonesia | 1996 | 02/03 | 6.6 | 322 | Yunnan, China |
1995 | 07/30 | 8.0 | 3 | Near Coast of Northern Chile | 1995 | 01/16 | 6.9 | 5530 | Kobe, Japan |
1995 | 10/09 | 8.0 | 49 | Near Coast of Jalisco Mexico | 1995 | ||||
1994 | 10/04 | 8.3 | 11 | Kuril Islands | 1994 | 06/06 | 6.8 | 795 | Colombia |
1993 | 08/08 | 7.8 | 0 | South of Mariana Islands | 1993 | 09/29 | 6.2 | 9748 | India |
1992 | 12/12 | 7.8 | 2519 | Flores Region, Indonesia | 1992 | 12/12 | 7.8 | 2519 | Flores Region, Indonesia |
1991 | 04/22 | 7.6 | 75 | Costa Rica | 1991 | 10/19 | 6.8 | 2000 | Northern India |
1991 | 12/22 | 7.6 | 0 | Kuril Islands | 1991 | ||||
1990 | 07/16 | 7.7 | 1621 | Luzon, Philippine Islands | 1990 | 06/20 | 7.4 | 50000 | Iran |
அன்பானவர்களே, மேலே இருக்கும் பட்டியல் கடந்த 1990 ம் ஆண்டு முதல், இந்த ஆண்டு வரை நிகழ்ந்த மிக்ப்பெரிய பூகம்பங்களும், மரணங்களும் குறித்த தகவல் அறிக்கையாகும். இதை சற்று கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மையை நாம் புரிந்துக் கொள்ள முடியும், மரணங்களின் எண்ணிக்கை ஏற்ற இரக்கத்தோடு காணப்படும் அதே வேளையில் படிப்படியாக உயர்ந்து வருவதை தெளிவாக காணலாம்.
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஒரே ஆண்டில், மிக அதிகமான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதை பற்றிய தகவல்களுக்கு கீழே உள்ள லின்கில் சென்று காணுங்கள். (http://theextinctionprotocol.wordpress.com/2011/07/12/2011-on-target-for-most-earthquakes-recorded-in-12-years/)
Turkey earthquake |
இதை முதலில் காணும்போது எனக்குள் ஏற்பட்ட அச்சத்தை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. நேற்று காலை கூட துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இவையெல்லாம் எதை காட்டுகிறது? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? பூகம்பம் வழக்கமானது என்றால் ஏன் அதிகரிக்க வேண்டும்? இதுவரை பூகம்பம் ஏற்படாத இடங்களில் கூட பூகம்பங்கள் நடக்கின்றனவே..
மத் 24:7" ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும் , கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
மாற்கு 13:8 " ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், ...
லூக்கா 21:11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்...
உண்மைதான் இயேசு ஆண்டவர் வருவதற்கு அவரே சொன்ன
அடையாளங்களில் முக்கியமானது பூகம்பம்.
என்ன செய்ய போகிறோம்?????
இயேசு ஆண்டவரை சந்திக்க ஆயத்தமா? இந்த காலையில் அவருக்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். அவரை சந்திக்க ஆயத்தப்படுவோம்.
ஜெபம் :
அன்புள்ள பரம தகப்பனே, நேற்றுக் காலை துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களை உமது கரத்தில் சமர்ப்பிக்கிறோம்
வீடுகளை, உறவுகளை இழந்து வாடுவோரை கண்ணோக்கும், உமது மேலான பாதுகாப்பில் அவர்களை ஆட்கொள்ளும், தொடர்ச்சியான பின் நில அதிர்வுகளில் எவ்வித ஆபத்தும் நேரா வண்ணம் அவர்களை காத்தருளும். இவ்வடையாளங்கள் எங்களை உம்மை சந்திக்க ஆயத்தப்படுத்துகிறதை நாங்கள் உணருகிறோம், எனவே சக மனிதரை நேசித்து வருங்காலத்தை நாங்கள் ஆதாயப்படுத்திக் கொள்ள எங்களுக்கு இக்காலையில் இயேசுவின் வழியாய் பலன் தாரும் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment