Text: மத்தேயு. 4:15
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது..
அன்பான உடன் விசுவாசிகளே உங்களை இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். இவ்வுலகின் இரட்சகர், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தை எங்கே துவங்கினார் தெரியுமா? கலிலேயா என்கிற பகுதியில். கலிலேயா என்பது ஏழைகளும், எளியவர்களும் வாழ்ந்த பகுதி. அக்கால மக்கள் கலிலேயர்களை மிகவும் தாழ்வாக கருதினர். ஆனால் ஆண்டவரோ அவர்கள் மத்தியில்தான் தன் ஊழியத்தை துவங்கினார்.
இந்த காட்சியைதான் மத்தேயு சுவிசேஷகர் மேற்கண்ட வசனத்தில் அழகாய் விளக்குகிறார், இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று.. காரணம் அவ்ர்கள் வாழ்க்கை தரம் அப்படி.
நம்முடைய வாழ்வும் ஏதோ ஒரு இருளில் தான் சிக்கியிருக்கிறது. பாவம், வறுமை, வியாதி, பிசாசு, போன்ற ஏதோ ஒரு இருள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது. ஆனால் எந்த இருள் நம்மை ஆட்கொண்டிருந்தாலும், கிறிஸ்துவாகிய உலகின் மெய்யான ஒளி நம்மில் வீசும்போது நாம் ஒளியின் சந்ததியாகிறோம். நம்மை ஆட்கொண்டிருக்கிற இருள் விலகியோடுகிறது.
அன்பானவர்களே இந்த காலை வேளையில் கிறிஸ்துவாகிய மெய்யான உலகின் ஒளி நம்மேல் உதிக்கிறார், நம்மை சூழ்ந்திருக்கிற எந்த இருளும் இபோதே நம்மை விட்டு அகன்று போகிறது. தைரியமாய் இந்நாளை துவங்குவோம், கிறிஸ்துவின் வெளிச்சத்தில் துணிவுடன் சந்தோஷமாய் நடப்போம் ஆமென்.
ஜெபம்:
அன்புள்ள கடவுளே, மெய்யான ஒளியாம் இயேசு இந்த காலையில் எங்கள் மேல் உதித்தற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம், அவரது வெளிச்சத்தில், துணிவுடன் இருளான துன்பங்களை மேற்கொண்டு வாழவும், சந்தோஷம் எங்கள் உள்ளத்தை ஆட்கொள்ளவும் எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment