Text: சங்கீதம்.37:4.
அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே உங்களை வாழ்த்துகிறேன், கடந்த 15 ம் தேதி வேலூரில், வள்ளலார் நகரில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற ஆதரவற்றோர் சிறுவர் விடுதியில் நமது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்கெனவே இதை நீங்கள் அறிவீர்கள். அன்று கர்த்தர் ஒரு பெரிய சங்கடத்தில் மிக அற்புதமாக நடத்தினார்.
அன்பானவர்களே உங்கள் வாழ்விலும் சந்திக்கிற தடைகளை கண்டு அஞ்சாதீர், அற்புதமாய் நடத்துகிற கடவுளிடம் ஜெபித்து தேவைகளை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு மனமகிழ்ச்சியாயிருங்கள், கர்த்தர்
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
சகோ.ரூபன் & நம் குழுவில் இணைந்த புதிய சகோதரன். |
அதாவது நம் சிறுவர் கொண்டாட்ட குழுவில் சகோதரர்.ரூபன் என்பவர் மிகவும் ஊழிய அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார், அவர்தான் அந்த விடுதி அங்கே இருப்பதை கண்டறிந்து சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்று வந்தார். எனக்கு தெரிவித்ததும் உடனே அதற்கான ஏற்பாடுகளை இரண்டு நாளில் துரிதமாக செய்தேன்.
குழுவின் அனைத்து சகோதரர்களையும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகும்படி கூறினேன். எல்லாரும் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டார்கள். 15 ம் தேதி காலை மீண்டும் அனைவரையும் தொடர்புக் கொண்டேன், எங்கே ஒன்றுக் கூட வேண்டும் என்பதை அறிவிக்க, ஆனால் யாருமே என் அழைப்பை எடுக்கவில்லை. எனக்கு ஒருவித சங்கடம் ஏற்பட்டது, காரணம் நாங்கள் அந்த விடுதிக்கு 10 மணிக்கு வருவதாக அறிவித்திருந்தோம், 10 மணிக்கு அங்கே போக வேண்டுமென்றால் ஆம்பூரிலிருந்து 8.30 மணிக்கே புறப்பட வேண்டும், ஆனால் 8 மணிவரை யாருமே என் தொலை பேசி அழைப்பை எடுக்கவில்லை. கடைசியாக சகோதரர் ரூபனை தொடர்புக் கொண்ட போது அவர் தெரிவித்த செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காரணம் நம் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு முக்கிய வேலை இருப்பதாகவும், யாருமே இப்போது வர ஆயத்தமில்லை என்றும் கூறினார், நீங்கள் ஆயத்தமா? என்றேன் நான் ஆயத்தமாயிருக்கிறேன் அண்ணா என்றார். உடனே ஆயத்தமாயிரு நாம் போகலாம் என்றேன். உடனே ஆண்டவரை நோக்கி ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்தேன், ஆண்டவரே இது உமது பணி நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டு விசுவாசத்தோடு ஆயத்தமானேன்.
8.30 க்கு வாணியம்பாடியிலிருந்து புறப்பட்டேன், 9 மணிக்கு ஆம்பூரை அடைந்தேன். அங்கே கண்ட காட்சி எனக்கு ஆச்சரியம் சகோதரர்.ரூபன் 6 சகோதரர்களோடு நின்றார். அதில் புதிதாக சகோதரர்கள் இருந்தனர். அவர்களோடு பேசக்கூட நேரமில்லை. உடனே புறப்பட்டோம். விடுதியை அடைந்தோம்.
பயிற்சியே பெறாத புதிய சகோதரர்களுக்கு எப்படி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று ஒரே முறை கற்றுக் கொடுத்தேன், அற்புதமாய் சகோதரர்கள் வெகு சிறப்பாக நடத்தினர். பிள்ளைகள் மெய்மறந்து ஆண்டவரை மகிமைப்படுத்தினர். நிகழ்ச்சியின் சிறப்பை பாராட்ட ஒரு குழந்தை தானாக முன் வந்து ஜெபித்தது எங்கள் குழுவினரை பெரிய உற்சாகமடைய வைத்தது.
எவ்வளவு அற்புதம், ஆண்டவர் ஊழியம் தடைபடாமல் இருக்க வேறு சகோதரர்களை ஆயத்தம் செய்தார். மேலான அற்புதம் என்னவென்றால், இந்நிகழ்ச்சிகள், நடத்த இரண்டு வாரங்கள் பயிற்சியெடுத்தோம், ஆனால் அன்று ஓரிரு நிமிட பயிற்சியில் புதிய சகோதரர்கள் கலக்கிவிட்டார்கள். இதுதான் கர்த்தரின் வழி நடத்தல்.
அதைதான் இங்கே சங்கீதக்காரன் மிக தெளிவாக கூறுகிறார் அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார் என்று.. எவ்வளவு பெரிய உண்மை..
இப்போது நானும் குழுவினரும் ஒரு உண்மையை புரிந்துக் கொண்டாட்டம், இந்த ஊழியத்தை நடத்துவது நாங்கள் அல்ல, நமதாண்டவர். நாங்கள் நினைத்தாலும் இவ்வூழியத்தை தடை செய்ய முடியாது. அதே நேரத்தில் மன மகிழ்ச்சியோடு இதை செய்யும்போது, அதின் தேவைகள் அனைத்தையும் அவர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்.
கதை நேரம் |
அன்பானவர்களே உங்கள் வாழ்விலும் சந்திக்கிற தடைகளை கண்டு அஞ்சாதீர், அற்புதமாய் நடத்துகிற கடவுளிடம் ஜெபித்து தேவைகளை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு மனமகிழ்ச்சியாயிருங்கள், கர்த்தர்
பார்த்துக் கொள்வார். ஆமேன்.
ஜெபம்:
தேவைகளில் எங்கள் பட்சம் நிற்கும் எங்கள் அன்பின் பரம தகப்பனே, எங்கள் தேவைகளை நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும், சரியான நேரத்தில் அவைகளை நிறைவேற்றி எங்களை உமது அற்புத பாதுகாப்பினால் வழி நடத்தும். இப்போதும் உம்மண்டை மனமகிழ்ச்சியோடு தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கிற அனைவரின் தேவைகளையும் நிறைவாக்கும் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment