இதைக்கண்ட கிராம மக்களும் சிறு பிள்ளைகளும் மிகவும் பிரமித்தனர். என்ன ந்டக்குமோ என்கிற ஒரு பதைபதைப்பு, எல்லாருக்குள்ளும் இருந்தது. ஆனால் போதகரும் நாங்களும் விடாமல் ஊக்கத்தோடே ஜெபித்துக் கொன்டிருந்தோம்.
அதற்கு பிறகு சகோதரியை அலைக்கழித்த பிசாசு பெருமூச்சோடு அவரை விட்டு அகன்றது. உடனே அருகில் இருந்த சகோதரிகள் ஓடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து, அன்போடு அவரை அழைத்துகொண்டு போய் பராமரித்தனர்.
ஆண்டவரின் மகிமை இவ்வாறு அற்புதமாய் மலைவாழ் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. இது எனக்கும் நம் குழுவினருக்கு புதிய அனுபவத்தையும், ஆண்டவருக்காய் உழைப்பதற்கு மிக அதிகமான உற்சாகத்தையும் கொடுத்தது. இந்த அனுபவத்தை தந்த ஆண்டவருக்கும், ஜெபத்தில் தாங்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். நன்றி.
ஊழியம் பெருக.....
ஏழை பிள்ளைகளின் வாழ்வில் இயேசுவின் அன்பும் அருளும் பெருகிட..
பற்றாக்குறைகள் நிவர்த்தியாக.....
ஊழியத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கிற சகோதரர்கள் உற்சாகமாய் இப்பணியில் தொடந்து ஈடுபட, அவர்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட......
இதுவரை இந்த ஊழியத்தை தாங்கியவர்களுக்காக...
தடையின்றி பணத்தேவைகள் சந்திக்கப்பட...
தொடர்ந்து ஜெபியுங்கள்..
தொடர்ந்து ஜெபியுங்கள்..
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
Praise God for the wonderful Deeds.Great.
ReplyDeleteRev.Gilbert and Rev.Milton Hats off.....
Keep on doing God ministry....
May God Bless..Rev.M.Immanuvel sabapathy