இது நமக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் தேவை அப்படியானால், நமக்கு அடுத்தவர்கள் ஒத்தாசையாகவோ, ஆதரவாகவோ இருக்க முடியுமா? பல நேரங்களில், நமக்கு நெருங்கினவர்கள் ஒத்தாசையாகவோ, ஆதரவாகவோ இல்லாமல் போனால் நாம் பெரிதும் வருந்துகிறோம். ஆனால் அவர்களும் ஒத்தாசையை எதிர் பார்ப்பவர்கள் தான் என்பதை மறந்து போகிறோம்.
அப்படியானால் ஒத்தாசையையும், ஆதரவையும் எதிர்பாராத ஒருவர்தான் நமக்கு ஒத்தாசையுடனும், ஆதரவுடனும் இருக்க முடியும். அப்படி ஒருவரை அடையாளம் காண முடியுமா? வேதாகமம் அப்படி ஒருவரை அடையாளம் காட்டுகிறது.
சங்கீதம்.20:2.. கடவுள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசை அனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பார்.
அன்பானவர்களே வானிலும் பூமியிலும் சர்வ அதிகாரம் கொண்ட கடவுள், நமக்கு பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்புகிறாராம், அவரே நம்மை ஆதரிக்கிறாராம். அவருக்கு நம்முடைய ஒத்தாசையோ ஆதரவோ தேவையில்லையே.
அதைதானே அன்பு ஆண்டவர் இயேசுவின் வாழ்வில் காண்கிறோம், கண்ணீரோடு வேதனையோடு அவரிடம் வந்த அனைவருக்கும் ஒத்தாசை செய்து, அவர்களுக்கு ஆதரவாய் நின்றாரே.
இன்றும் நமக்காக, நம்மோடிருந்து, நம்மை ஆதரித்துவருகிறார். எனவே உற்சாகமாய் இந்நாளை துவங்குவோம். ஆண்டவரின் ஆதரவில் மேன்மைகளை பெறுவோம். ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment