அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், நாம் யாரோடு நெருக்கமாய் பழகுகிறோம் என்பது நம் வாழ்வில் மிக முக்கியமானது, காரணம் நல்லவர்கள் நமக்கு நெருக்கமாக இருந்தால், நம் வாழ்க்கை நன்றாக இருக்கும், கெட்டவர்களை நமக்கு நெருக்கமாக கொண்டிருந்தால், நம் வாழ்க்கை கெட்டு போகும், எனவே நாம் யாரோடு நெருக்கமாய் இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது.
சங்கீதம்.145:18 ல் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய் தன்னை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாய் இருக்கிறார். என்று சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். அதாவது யார் கடவுளை நோக்கி உண்மையாய் கூப்பிடுகிறார்களோ, அவர்களுக்கு கடவுள் நெருக்கமானவராக வருவார். அவர் நெருக்கமாக வந்தால் என்ன நடக்கும்? நல்லவர்கள் நமக்கு நெருக்கமாக இருந்தாலே நம்முடைய வாழ்வு நன்றாக இருக்குமென்றால், இவ்வுலகம் முழுதையும் நன்மையால் முடிசூட்டுகிற இறைவன் நம்மோடிருந்தால் என்ன நடக்கும். யோவான் 11 ம் அதிகாரத்தில் அதற்கு பதில் இருக்கிறது.
ஆண்டவர் ஊழியத்தின் நிமித்தமாக ஊர்கள் தோறும் போய்க்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பெத்தானியாவிலிருந்து, அவரை தேடி சிலர் வந்தனர், அவர்கள் வந்த்து கூறிய செய்தி, பெத்தானியா ஊரானான லாசரு சுகவீனமாய் இருக்கிறான் என்பதே. யார் இந்த லாசரு இயேசுவின் நெருங்கிய நண்பன், அவனுடைய சகோதரிகளான, மார்த்தாள், மரியாள் என்பவர்கள் இயேசுவின் பெண் சீடர்களாக அவரோடு ஊழியத்தில் உற்சாகமாய் பங்கெடுப்பவர்கள். ஆனால் ஆண்டவரால் உடனே செல்ல முடியவில்லை. தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும், சமீபமாய் வர வேண்டியவரல்லவா? ஆனால் ஊழியத்தின் நிமித்தம் அவரால் உடனே செல்ல முடியவில்லை. இரண்டு நாள் கழித்தே அவர் புறப்பட்டார், காரணம் அவன் மரித்து போனான் என்பதை அறிந்திருந்தார். ஆண்டவர் சமீபத்தில் இல்லை என்றால், நம் வாழ்விலும் நம் துன்பங்கள் நம்மை மேற்க்கொண்டுவிடும் என்பதற்கு இந்த பகுதி தெளிவான உதாரணம்.
ஆண்டவர் சீடர்களோடு பெத்தானியாவை நெருங்கிய செய்தியை, லாசருவின் சகோதரியான மார்த்தாள் கேள்விப்பட்டு ஓடிவந்து, ஆண்டவரே நீர் இங்கே இருந்த்திருப்பீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள், எவ்வளவு பெரிய சத்தியம், ஆண்டவர் மட்டும் அவன் வியாதியாய் இருக்கும்போதே அவர்களுக்கு சமீபமாய் இருந்த்திருந்தால் அவன் மரித்திருக்கமாட்டான். ஆனால் ஆண்டவர் தாமதமாக வந்தாலும் அவர் சமீபமாய் வந்தால் போதும் எல்லாமே மாறிவிடும்.
ஆம் அவர்கள் துனபமும் மாறியது லாசருவின் கல்லறையை காண்பிக்க சொல்லி மரித்து நாளான பிணமாக, துர் நாற்றம் வீசுகிற நிலையிலிருந்த பிணத்தை லாசருவே வெளியே வா என்ற ஒரே வார்த்தையில் உயிரோடு கொண்டுவந்தார்.
அன்பானவர்களே, ஆண்டவர் நம் பக்கத்தில் இருந்தால் போதும், நம் வாழ்வு மகிமையான வாழ்வாக மாறிப்போகும், தாமதமானாலும் நம்மை தேடி வருவார். ஆண்டவரிடத்தில் எவ்வளவு நாளாய் கேட்கிறேன், இன்னும் அவர் தரவில்லையே என்று சோர்வடைகிறீர்களா? ஏன் ஆண்டவரே என்று தாமதத்தை குறித்து வருத்தப்படுகிறீர்களா? அன்பானவர்களே உண்மையாய் கூப்பிடுகிற யாரையும் அவர் தள்ளாதவர். தாமதமாகிறதா, நீங்கள் அற்புதத்தை பெற்றுக் கொள்ள போகிறீர்கள். இந்த நம்பிக்கையோடு, உற்சாகமாய் அவரை கூப்பிடுகிறவர்களாய் வாழ பரிசுத்தாவியானவர் நம்மை காத்துக் கொள்வாராக ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment