அன்புள்ள உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். நாம் அனைவரும் பொக்கிஷங்களை விரும்புகிறவர்கள். இரவும் பகலும் கடினமாய் உழைக்கிறோம் பொக்கிஷத்தை சேர்ப்பதற்காக. உழைப்பில் பலமுறை சோர்வையும் சிலமுறை வெற்றிகளையும் காணுகிறோம். நம் உழைப்பு ஒருக்காலும் வீணாகாதபடி வெற்றிகளை குவிக்கும் வாழ்வு கிடைத்தால் எப்படி இருக்கும்? அநேக பொக்கிஷங்களை சம்பாதித்துவிடலாமே.
பொக்கிஷங்களை அடைய வேண்டும் என்றால் நாம் செய்யும் காரியமெல்லாம் வாய்க்க வேண்டும், நாம் செய்வதெல்லாம் வாய்த்தால் தான் நம் வாழ்வு பொக்கிஷம் நிறைந்ததாகும், பொக்கிஷம் நிறைந்தால் நம் வாழ்வின் பிரச்சினைகள் தீரும், சமாதானம் பொங்கும். அப்படியானால் நாம் செய்வதெல்லாம் வாய்க்க வேண்டும்.
அதாவது, பணி உயர்வுக்காக உழைத்தால் பணி உயர்வு கிடைக்க வேண்டும், வேலை தேடினால் கிடைக்க வேண்டும், வீடு கட்ட துவங்கினால் தடையின்றி கட்டி முடிக்க வேண்டும், கல்வி கற்றால் தேர்ச்சி பெற வேண்டும். வியாதிக்கு மருத்துவம் பார்த்தால் குணமாக வேண்டும்.
அதாவது, பணி உயர்வுக்காக உழைத்தால் பணி உயர்வு கிடைக்க வேண்டும், வேலை தேடினால் கிடைக்க வேண்டும், வீடு கட்ட துவங்கினால் தடையின்றி கட்டி முடிக்க வேண்டும், கல்வி கற்றால் தேர்ச்சி பெற வேண்டும். வியாதிக்கு மருத்துவம் பார்த்தால் குணமாக வேண்டும்.
சங்கீதம்.1:2 - 3 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்: அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
அப்படியானால் நமது பொக்கிஷம் வேதாகமம். உங்கள் வீட்டில் வேதாகமம் இருக்கிறதா? எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது? தினந்தோறும் படிக்கும் பழக்கம் இருக்கிறதா? குழந்தைகளோடு அதை தியானிக்கிறீர்களா? நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். பொக்கிஷம் உங்கள் வீடு தேடி வரும்.
கர்த்தருடைய வார்த்தையை உங்கள் வீட்டிலுருந்தே தினந்தோறும் படிக்கவும் அதை தியானிக்கவுமே இந்த தளத்தை அர்ப்பணித்திருக்கிறேன், இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கர்த்தருடைய வார்த்தையில் இரவும் பகலும் தியானித்து. பொக்கிஷங்களோடு நிறைவான வாழ்வு வாழ இயேசு கிறிஸ்து நம் அனைவரையும் பரிசுத்தாவியினால் நிறைத்து காத்துக் கொள்வாராக ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment