வாழ்க்கை என்பது நிரந்தரமானதல்ல, நாம் வாழும் வாழ்க்கை மிகவும் குறுகியதே, 70 வருடம் அல்லது பெலத்தின் மிகுதியால் 80 வருடம் வாழ்ந்தாலும், இந்த வாழ்க்கை குறுகியதே, அது சீக்கிரமாய் கடந்து போகிறது. எனவே வாழும்போதே நம் வாழ்வை நாம் காத்துக்கொள்ள வேண்டும். காரணம், நாம் வெறும் சரீரம் கொண்டவர்களல்ல. ஆன்மாவை கொண்டவர்கள்.
ஆன்மாவை காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எப்படி வாழும்போது, நம் சரீரத்தை எந்த சேதமுமில்லாமல் காத்துக் கொள்ள முயற்ச்சிக்கிறோமோ, அதே போல நம் ஆத்துமாவையும் காத்துக் கொள்ளவேண்டும். ஆன்மா இருக்கும் வரை மனிதன், ஆன்மா பிரிந்துவிட்டால் பிணம்.
எனவே சரீரத்தைவிட, ஆன்மா முக்கியம். எனவே தான் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆன்மீகவாதிகள், வீட்டை விட்டு, உறவுகளை விட்டு, உணவை மறந்து, சரீர இன்பங்களை மறந்து காடுகளிலும் குகைகளிலும் போய் தங்கள் ஆன்மாவை காத்துக் கொள்ள தவமிருந்தார்கள். இது எல்லா நாடுகளிலும் எல்லா சமூகத்திலும் நடந்திருக்கிறது. இப்போதும் கூட நடக்கிறது.
இந்த ஆன்மாவை காத்துக் கொள்ளும் வழியைதான் வேதாகமம் நமக்கு போதிக்கிறது. நித்திய ஜீவனின் வழியை, அதாவது அழிவற்ற ஆன்மாவை பெறும் வழியை வேதாகமம் நமக்கு போதிக்கிறது.
யோவான்.3:16, தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
ஆம் அன்பானவர்களே, நாம் அழிவில்லா ஆன்மாவை பெற இயேசு ஆண்டவரை விசுவாசிக்க வேண்டும். அவரே நம் ஆத்துமாவை அழிவிலிருந்து மீட்க வல்லவர். அவரது இரத்தம் அழிவில்லா ஆன்மாவை பெற தடையாக உள்ள பாவத்தை கழுவி துடைத்து, பாவ மன்னிப்பை வழங்கி நம்மை அழிவில்லா வாழ்வில் சேர்க்கிறது. இந்த உலகில் பாவமே செய்யாத அவர் நம் பாவங்களை மன்னிக்க தன் உயிரை தாமே கொடுத்தார். இதன் மூலம் மனிதனின் பால் தான் கொண்ட எல்லையற்ற அன்பை இவ்வுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். இயேசுவையன்றி வேறொரு இரட்சகர் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. அவரை நம்புவோம், நம் வாழ்வையும் ஆன்மாவையும் அழிவின்றி காத்துக் கொள்வோம். ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment