அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்று நம் ஆசீர்வாதத்திற்கென எடுத்துக் கொண்ட தியான வசனம், யாத்திராகமம்.33 :14 .
நம் யாவருக்கும் பிடித்தமான வசனம், நாம் மிகவும் விரும்புகிற வசனம், நம்மில் அநேகர் இந்த வசனத்தை தங்கள் வாகனங்களில் ஒட்டி வைத்திருப்பார். இந்த வசனத்தை கடவுள் சொன்ன சூழ்நிலையை நாம் தியானித்தால் அதன் மேன்மையை இன்னும் தெளிவாக உணர முடியும்.
இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, கானானை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்த காலத்தில் மோசே கடவுளை நோக்கி ஒரு விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் என்னவென்றால்? கடவுளே நான் இஸ்ரவேல் மக்களை அழைத்துக் கொண்டு போகிறேன் காரணம் நீர் அழைத்துக் கொண்டு போ என்று சொன்னீர். ஆனால் என்னோடு இன்னாரை அனுப்புவேன் என்று நீர் சொல்லவில்லை எனவே என் மீது கிருபையாய் இரும், உமது வழியை எனக்கு அறிவியும் என்று வேண்டிக் கொண்டார். ( யாத்திராகமம்.33 :12 -13 )
அதற்கு கடவுள் கொடுத்த பதில்தான் இந்த வசனம். மோசே ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளார், தனியாக அல்ல லட்சக் கணக்கான மக்களோடு, செங்கடலை கடக்கும் வரை கர்த்தரே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார், இப்போது வனாந்திரத்தில் நீண்ட நெடிய பயணம் செய்ய வேண்டியுள்ளது. எந்த திசையில் எப்படிப்பட்ட ஆபத்து வரும் என்று தெரியாது. ஆனால் மோசேவுக்கு சரியான துணை என்று கடவுள் யாரையும் நியமிக்கவில்லை, அந்த பயம் மோசேவுக்கு இருக்கிறது. காரணம் எந்த ஆபத்து நேர்ந்தாலும் மோசேதான் முழு பொறுப்பாளி. எனவே கடவுளை நோக்கி வேண்டுகிறார்.
ஆனால் கடவுள் தந்த பதில் என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்பதே.
இது சாதாரண வழி பயணம் அல்ல, அடிமைத்தனத்தின் வாழ்விலிருந்து, சுதந்திர வாழ்வை நோக்கிய வாழ்க்கை பயணம். கடவுள் கூறிய பதில் என் சமூகம் உங்களோடு வரும் என்பதே.
பிரியமானவர்களே, நம்முடைய வாழ்வில் நம்மோடு பயனிக்கிறவர் நம் கடவுள், நம் வாழ்வு உயர, நன்மைகளை பெற்றுக்கொள்ள, நம்மோடு பயனிக்கிறவர்.
இயேசு கிறிஸ்து சொன்ன ஒரு அறிவுரை, ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர சொன்னால், நீ அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்றார். ஏன் அப்படி செய்ய சொன்னார் அன்பின் நிமித்தமாக. அதே போல நம் ஆண்டவரை நாம் கூப்பிட்டால் நம் வாழ்வு முழுக்க இனிய உறவாக பயணித்து ஆசீர்வதிப்பார்.
இந்த திட நம்பிக்கையோடு, அவரோடு பயணிக்கிறோம் என்ற உத்தரவாதத்தோடு இந்த நாளை துவங்குவோம் ஆமென்.
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment