அன்பான தள நண்பர்களே உடன் விசுவாசிகளே, ஸ்தோத்திரங்கள்.
ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போதும் இந்த நாள் ஆசீர்வாதமான நாளாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
காரணம் ஒவ்வொரு நாளும் இவ்வுலகில் நாம் சந்திக்கிற போராட்டங்கள் கொஞ்சமல்ல, பிசாசின் சோதனைகளும், எதிரிகளின் வஞ்சங்களும், தேவையில்லா எதிர்ப்புகளும், ஏன் என்றே தெரியாத தடைகளையும் சந்தித்து தினமும் சோர்ந்து போகிறோம்.
கர்த்தருடைய ஆசீர்வாதம் இருக்குமானால் எல்லாவற்றையும் மேற்கொண்டு ஜெயமாய் நிற்போம் அல்லவா? ஒரு நாள் ஒரு ஆசீர்வாதம் போதுமா? போதாதே... மென்மேலும் ஆசீர்வாதம் வேண்டும் அல்லவா?
நம் கடவுள் நம்மை உண்மையிலேயே மென்மேலும் ஆசீர்வதிப்பவர். உபாகமம்.15 ;5 ல் கடவுள் தன் ஜனமாகிய இஸ்ரவேலருக்கு சொல்லுகிற செய்தி, உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பேன் என்பதே.
புதிய இஸ்ரவேலர்களாகிய நமக்கு இறைவன் தருகிற உத்தரவாதம் தான் இது. காரணம் கடவுள் பட்சபாதம் உள்ளவரல்ல. எனவே உற்சாகமாய் பணிகளை துவங்குவோம் கர்த்தர் நம்மை மென்மேலும் ஆசீர்வதிப்பார். ஆமென். நீங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களை இந்த தளத்தில் அறிவியுங்கள் உலகிற்கு அது சாட்சியாகட்டும் ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment