புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள், புத்தியில்லாத ஸ்திரீயோ, தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
நீதிமொழிகள்.14 :1 .
அன்பு தோழி! பெண்களால் எதையும் கட்டி எடுக்கத்தான் முடியும், அவர்கள் எதையுமே அவ்வளவு சீக்கிரமாய் இடித்துபோட்டுவிட முடியாது என்பதுதான் பொதுவான கருத்து.
ஆயினும் அனேக வேளைகளில் நமது அளவற்ற கோபமும், எரிச்சலும், நம்முடைய சந்தோஷங்களுக்கு உலை வைத்துவிடும் அபாயமும் அதிகமாக காணப்படுகிறது. "உடனிருந்தே கொல்லும் வியாதி போல" உடனிருந்தே நமது கோபம் நம்மை அழித்துவிட நோக்கமாயிருக்கும்.
"பெருங்கோட்டையையே எரித்துவிடும் துளி நெருப்பு போல" நமது சிறிய கோப வெளிப்பாடுகள் கூட பெரும் விளைவுகளை சில வேளைகளில் ஏற்படுத்திவிடும். தோழி, கடவுள் கிருபையாய் நமக்கு இந்த உலக வாழ்வினை சிறப்பாக வாழும் சிலாக்கியத்தை தந்திருக்கின்றார். ஒவ்வொரு மணித்துளியும் அவரிலே நம்பிக்கை வைத்து நாம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று அவர் விரும்புகின்றார்.
கோபம் என்பது உணர்வின் வெளிப்பாடுதான் என்றாலும், கோபப்படுவதற்கு முன் ஒரு முறை நிதானித்து, இந்த இடத்தில் இவ்வளவு கோபம் தேவையா? என்று மறு பரிசீலனை செய்வது மோசமான விளைவுகளை தவிர்க்க உதவியாக இருக்கும். ஏனெனில் கோபம் முதலில் நமது புத்தியை மழுங்கடிக்கின்றது.
தோழி! நமது சகிப்புத் தன்மையுனாலும், புத்திசாலித்தனத்தினாலும், சண்டைகள் வர வேண்டிய இடத்திலே, சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டுவர நிச்சயம் இயலும். நாமும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும், நம்மை சுற்றி இருப்போரும், முக்கியமாய் நமது குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
வானத்து நட்சத்திரங்கள் வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் பகலிலே அது நமக்கு தெரியவில்லை, எனினும், இரவிலே அது அழகாக வெளிப்படுகிறது.
அன்புத்தோழி! எரிச்சலும், கோபமும், முரட்டாட்டமும்,
புத்தியின்மையும், நம்மை மழுங்கடித்துவிடாதபடி, விழிப்புடன் நம் வீட்டை, குடும்பத்தை கட்டியெழுப்புவோம். ஜெபத்தின் வழியாகவும், வேத வாசிப்பின் வழியாகவும் ஆண்டவரோடு தரித்திருப்போம்.
புத்தியின்மையும், நம்மை மழுங்கடித்துவிடாதபடி, விழிப்புடன் நம் வீட்டை, குடும்பத்தை கட்டியெழுப்புவோம். ஜெபத்தின் வழியாகவும், வேத வாசிப்பின் வழியாகவும் ஆண்டவரோடு தரித்திருப்போம்.
புத்தியில்லாமல் வீட்டை
இடித்துப்
போடுகிறவர்களாய்
அல்ல, புத்திசாலிகளாய்
வீட்டிற்கும், திருச்சபைக்கும், சமூகத்திற்கும் ஆசீர்வாதமாய் விளங்கும்படியாய் ஆண்டவர்தாமே தமது பரிசுத்தாவியினால் நம் ஒவ்வொருவரையும் பலப்படுத்திக் காப்பாராக ஆமென்.
இடித்துப்
போடுகிறவர்களாய்
அல்ல, புத்திசாலிகளாய்
வீட்டிற்கும், திருச்சபைக்கும், சமூகத்திற்கும் ஆசீர்வாதமாய் விளங்கும்படியாய் ஆண்டவர்தாமே தமது பரிசுத்தாவியினால் நம் ஒவ்வொருவரையும் பலப்படுத்திக் காப்பாராக ஆமென்.
அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
கருத்துரையிடாமல் செல்லலாமா தோழியரே........
No comments:
Post a Comment