ஒரு கிறிஸ்தவ செல்வந்தர் தனக்கென ஒரு அழகான வீட்டை கட்ட விரும்பினார், அந்த வீட்டின் அழகை மற்றவர்கள் கண்டு
வியக்க வேண்டும் என்றும் விரும்பினார்.எனவே ஒரு மலைப் பாங்கான உயரமான இடத்தை தெரிந்தெடுத்து அங்கே தனது மிக அழகான வீட்டை கட்டினார். வீடு கட்டி முடித்த பிறகு அதன் அழகை அவர் வீட்டின் நான்கு திசைகளிலும், தூரத்தில் நின்று ரசித்து பார்த்தார். அதன் அழகில் அவரே மயங்கினார். ஆனால் அது நீடிக்கவில்லை காரணம் ஒரு திசையில் இருந்து வீட்டை காணும்போது, அது மலை பாங்கான இடமாய் இருந்ததால், ஒரு பெரிய பாறை வீட்டின் அழகை முற்றிலுமாய் மறைத்தது.
அது அகற்ற முடியாத பெரிய பாறையாய் இருந்தது, அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவர் கிறிஸ்தவர் என்பதால் இயேசு கிறிஸ்து கூறிய ஒரு உண்மை நியாபகத்திற்கு வந்தது. *கடுகளவு விசுவாசம் இருந்தால் மலையை பெயர்ந்து போ என்றால் அது பெயர்ந்து போகும்* என்று ஆண்டவர் சொன்னது நியாபகம் வந்தது உடனே ஓடினார், வீட்டில் உபவாச ஜெபம் ஆயத்தம் செய்தார். முழு இரவும் பாறை பெயர்ந்து வேறு இடத்திற்கு போக வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டே இருந்தார்.
விடியல் வந்தது, ஆசையோடு எழுந்து ஓடிவந்தார், அந்த பாறை இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தார் பறை அதே இடத்தில் கம்பீரமாய் நின்றது. நொந்து போனவர் சொன்ன வார்த்தை *"எனக்கு முன்னாடியே தெரியுமே இது போகாதுனு"* ..
அன்பானவர்களே இது வேடிக்கை அல்ல. உண்மையில் நம் வாழ்வில் நமக்கு இருக்கிற விசுவாசத்தின் அளவுகோலை தெளிவாக காண்பிக்கிறது. பல விஷயங்களை நடக்காது என்று தீர்மானித்துவிட்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறோம், அதுவா விசுவாசம்?
எரேமியா 17 ம் அதிகாரம 7 ம் வசனம் கூறுகிறது கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரை தன நம்பிக்கையாக கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
விசுவாசிக்கிறவன் பாக்கியவான் ஆனால் அது விசுவாசமாக இருக்க வேண்டும். நமக்குள் விசுவாசம் இருக்கிறதா? இல்லை இந்த கதையில் வரும் மனிதனுக்கு இருக்கிறதை போல் அவிசுவாசம் இருக்கிறதா? யோசிப்போம்..
மெய்விசுவாசம் பெற்றிட பரிசுத்தாவியானவர் தாமே நம்மை வழி நடத்தி காப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment