அன்பான சகோதர சகோதரிகளே, உங்களுக்கு என் காலை வணக்கங்கள். ஒரு குழந்தை பிறந்து, கவிழ்ந்து தவழ ஆரம்பித்து பின் எழுந்து நின்று நடக்க பழகும்போது, பல முறை சறுக்கி விழுகிறது. அதனால் பல காயங்கள் பிள்ளைகளின் சரீரத்தில் இருக்கும். ஐயோ பிள்ளை விழுகிறதே, காயம் ஏற்படுகிறதே என்று பெற்றோர்கள் பயந்து குழந்தையை தரையில் விடாமல் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தூக்கியே வைத்திருந்தால் பிள்ளை நடக்க தெரியாத குழந்தையாக வளரும், நடக்க வெகு காலம் ஆகிவிடும்.
எனவே சறுக்கல் என்பது வாழ்வில் இயற்கையானது, இது நடை பயிலுவதில் மட்டுமல்ல, வாழ்வில் முன்னேற்றத்துக்கான போராட்டத்திலும் தொடர்கிறது. காரணம் நாம் தேடும் வெற்றி அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை பல போராட்டங்களையும் சறுக்கல்களையும் சந்தித்த பிறகுதான் வெற்றி சாத்தியப்படுகிறது. ஆனால் நாமோ சறுக்கல்களே இல்லாத வெற்றி வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை.
காரணம் சறுக்கல்கள் என்பது இயற்கையானது, ஆனால் நம்மில் பலர், ஒரு சின்ன சறுக்கல் வந்துவிட்டால் கூட அவ்வளவுதான் வாழ்வே பறிபோய்விட்டதை போல உணர்ந்து வேதனையில் மூழ்கிவிடுகிறோம். அதற்கு பிறகு தொடர்ந்து முயற்சிக்கும் மனோபலம் இல்லாதவர்களாய் முடங்கிவிடுகிறோம். பரீட்சையில் தோற்றவர்கள், வேலை கிடைக்காத வாலிபர்கள், தகுதி இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள், வியாபாரத்தில் எடுத்தவுடனே நஷ்ட்டத்தை சந்தித்தவர்கள், இப்படி சறுக்கல்களை சந்திப்பவர்கள் வாழ்வையே வெறுத்துவிடுகின்றனர்.
ஆனால் வேதாகமத்தில், 94 வது சங்கீதம் 18 வது வசனத்தில் சங்கீதக்காரன் கூறுகிறார், என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே உமது கிருபை என்னை தாங்குகிறது.
அன்பானவர்களே, எவ்வளவு பெரிய உண்மை இது, நம் கால் சறுக்கினால் கர்த்தரின் கிருபை வந்து தாங்குகிறது, இதை வாழ்வில் அனுபவித்திருக்கிறீர்களா?
இல்லை என்றால் இனி சறுக்கும்போது இயேசுவே என்று ஒரு குரல் கொடுத்து பாருங்கள் அவர் தாங்குவார், நாம் மீண்டு எழும் பாக்கியத்தை கொடுத்தருள்வார். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காத்துக் கொள்வாராக ஆமென்.
இல்லை என்றால் இனி சறுக்கும்போது இயேசுவே என்று ஒரு குரல் கொடுத்து பாருங்கள் அவர் தாங்குவார், நாம் மீண்டு எழும் பாக்கியத்தை கொடுத்தருள்வார். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காத்துக் கொள்வாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment