அன்புள்ளவர்களே காலை ஸ்தோத்திரங்கள், இன்றைய தியான வசனம். சங்கீதம்.136 :1
இங்கே சங்கீதகாரர் கர்த்தருக்கு நன்றி செலுத்த இரண்டு காரணங்களை சொல்லுகிறார் ஒன்று அவர் நல்லவர் என்பதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்கிறார், அவர் நல்லவரால் இருப்பதால் தானே ஒவ்வொரு நாளும் நன்மைக்கு நேராக நம்மை வழி நடத்துகிறார் , நம் ஜீவனுக்கும் சரீரத்திற்கும் தேவையானவைகளை, குறைவில்லாமல் கொடுத்து வருகிறார், எனவே நல்லவராக இருந்து இந்த காலையையும் நம்மை ஜீவனோடும் சரீர ஆரோக்யத்தொடும், காண செய்த கடவுளுக்கு நம் உதடுகளின் கனியாகிய நன்றியை ஏறெடுப்போம்.
இரண்டாவது காரணம் அவர் கிருபை என்றுமுள்ளதால் நன்றி செலுத்த கூறுகிறார். கடவுளுடைய கிருபை உள்ளவரை இருப்பதால் மாத்திரமே அவர் நமக்கு நன்மை செய்கிறார், காரணம் நம்மை மண் என்று அறிந்திருக்கிறார், அவரிடத்தில் இருந்து கேட்டு பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவர்களல்ல நாம், பாவத்தினாலும் பாவ சுபாவத்தினாலும், அவரை விட்டு நாம் வெகு தூஎரம் பிருந்து வந்துவிட்டவர்கள் நாம், ஆனாலும் தன் சொந்த குமாரனான இயேசு கிறிஸ்துவை அனுப்பி நம்மை அவருடைய சொந்த் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு, அவருடைய சுத்த கிருபையால் ஜீவனோடும் ஆரோக்யத்தொடும் நம்மை காத்து வருகிறார்.
எனவே இந்த காலையை நாம் கண்டதற்கு காரணம் கடவுள் நல்லவராகவும் கிருபையுள்ளவராகவும் இருப்பதால் மட்டுமே, எனவே ஒரு கணம் நின்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்லி இந்த நாளை துவங்குவோம் அதுவே நம் வாழ்வை காக்கும், ஆமென் .
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது
நம் வாழ்வுக்கு நன்மை செய்கிற கடவுளுக்கு நன்றி செலுத்துவது நம்முடைய வாழ்வில் நாம் பெற்றுக்கொள்கிற பாக்கியமான நேரம். நாம் நம்முடைய கடவுளுக்கு நன்றி செலுத்த அனேக காரணங்கள் இருக்கிறது, அதிலே மிக முக்கியமான ஒரு காரணம், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய காலையை ஜீவனோடு காண்கிற பாக்கியத்தை நமக்கு தருகிறாரே அதற்காக ஒவ்வொரு காலையும் நான் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.இங்கே சங்கீதகாரர் கர்த்தருக்கு நன்றி செலுத்த இரண்டு காரணங்களை சொல்லுகிறார் ஒன்று அவர் நல்லவர் என்பதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்கிறார், அவர் நல்லவரால் இருப்பதால் தானே ஒவ்வொரு நாளும் நன்மைக்கு நேராக நம்மை வழி நடத்துகிறார் , நம் ஜீவனுக்கும் சரீரத்திற்கும் தேவையானவைகளை, குறைவில்லாமல் கொடுத்து வருகிறார், எனவே நல்லவராக இருந்து இந்த காலையையும் நம்மை ஜீவனோடும் சரீர ஆரோக்யத்தொடும், காண செய்த கடவுளுக்கு நம் உதடுகளின் கனியாகிய நன்றியை ஏறெடுப்போம்.