முதல் முறையாக இந்த தளத்தில் ஒரு சிறுகதை வெளியிடுகிறேன் இந்த சிறுகதை எழுதியவர் ஓய்வுப்பெற்ற ஆசிரியரும் என் தந்தையுமான திரு ஏ. ஏசையன் அவர்கள். இவரது கதைகள் விசுவாசத்தை தூண்டும் இனிமையான அனுபவங்கள். இந்த இனிமையான அனுபவத்துக்குள் பயணமாவோம்.
வேளை வந்தது
என்ன சலோமி, என்ன சொல்கிறான் உன் பையன்?
பேசாம என் சின்ன தங்கச்சி பொண்ணு இருக்காளே "ராகேல்" அவளை கட்டிக்கச் சொல்லு, ஏழரை கழுதை வசாகுது, இன்னும் காலம் தாழ்த்த முடியாது. அவளை கட்டிக்கிட்டா அவன் போழைச்சான் இல்ல? சல்லிக்காசு தரமாட்டேன்.
உடனே சலோமியும் வம்புக்கு வந்தாள். நல்லா இருக்கே நீங்க சொல்ற நியாயம்? என் தம்பி பொண்ணு "லேயா" அவனுக்குன்னேதான் வளர்ந்திட்டு வாரா. அவளைத்தான் நான் கட்டுவேன். உங்க குடும்பத்துல நான் காலை வச்சி படுற கஷ்டம் போதும். அவனையும் அந்த பாழும் கிணத்துல தள்ள என்னால முடியாது.
என்னடி சொன்ன? உன் குடுமபத்துல பொண்ணு எடுத்து நான் அவஸ்த்தை படுவது போதாதா? அவனையும் நான் கஷ்ட்டப்படுத்தனுமா? பேசாம, என் குடுமத்துல காலை வைக்கச்சொல்லு.
இந்த அப்பம்மா உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான் டேனி. அப்பா வெளியே போய்விட்டார். அம்மா அடுப்படி வேலையில் ஈடுப்பட்டாள் . மெதுவாக அடுப்படிக்குள் நுழைந்தான். அப்பாவிடம் பேசிய இதே கோபத்தில் திரும்பினாள் அம்மா.
ஏன்டா டேனி, 28 வசாகுது. இன்னும் ஏன்டா தொல்லை பன்ற? எங்க தம்பி மகள் லேயா உனக்குன்னே வளர்ந்திட்டு வரா. அவளைக் கட்டிக்கோ, கட்டிக்கோன்னு சொல்லி என தொண்டை தண்ணி வத்திப்போச்சிடா. அந்த மனுஷன் என்னடான்னா அவரு தங்கச்சி பொண்ணு, அதான் அந்த கொரங்கு மாதிரி இருக்கே, ராகேல் அவளை தான் கட்டுவேன்னு காச்சி முச்சினு கத்திட்டு போறார் . நான் சொன்னா கேளுடா எங்க லேயா மூக்கும் முழியுமா இலட்சணமா இருக்கா. எங்க சொந்தம் விட்டு போக குடாதுடா. என் கண்ணுல்ல? எனக்கு சாதகமா சொல்லி என் வயித்துல பாலை வாரேண்டா?
அம்மா நீங்களும் அப்பாவும் என் கேரக்டரையே புரிஞ்சிக்க மட்டேங்குரிங்க. நீதி மொழிகள் 31 ம் அதிகாரம், படிங்கம்மா, குறிப்பா, அதுல பத்தாம் வசனம் பாருங்க. குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை, முத்துக்களை பார்க்கிலும் உயர்ந்ததுன்னு சொல்லியிருக்கு. இப்பவே போய் பைபிள் எடுத்து படிங்கம்மா, நான் அப்படிப்பட்ட பெண்ணைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். வாயடைத்து அமைதியானாள் சலோமி.
அன்று ஞாயிற்றுக் கிழமை, சார்லட் சுறுசுறுப்பாக ரெடியானாள். ஆலயத்திற்கு போவதைக் காட்டிலும் விருப்பமான ஒரு நிகழ்வு அவளுக்கு இருந்ததே இல்லை. ஞாயிறு வந்தாலே, அவள் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும். முதல் ஆளா முதல் பெஞ்சில் உட்கார்ந்து விடுவாள். முதல் பாட்டில் இருந்து கடைசியில் ஆமென் பாடறது வரை அவள் குரல் தான் உச்சஸ்தாயில் ஓங்கி ஒலிக்கும்.
ஆலயம் அவள் வீட்டிலிருந்து சின்ன சந்தில் தொடங்கி பெரிய வீதி வழியாக தொடர்ந்து பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக பத்து நிமிடம் நடை. நெடுஞ்சாலை வந்ததும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வேண்டி வரும். சார்லட் பரபரபோடு போய்க்கொண்டிருக்கிறாள். பெங்களூர் to சென்னை எக்ஸ்ப்ரஸ் பஸ் வந்துக்கொண்டிருக்கிறது.
ஒரு குழந்தை நெடுஞ்சாலையில் ஓடுகிறது. கண் இமைக்கும் நேரம், கண் மண் தெரியாமல் பஸ் ஓட்டும் டிரைவர். குழந்தையை பஸ் அடிக்கப்போகிறது. அனைவரும் செயலிழந்தனர். ஒருத்தி மட்டும் ஓடினாள். பாய்ந்து குழந்தையை தூக்கி சாலை ஓரத்தில் வீசினாள். அவள் சார்லட்.
சடன் பிரேக். சர்லேட்டை முத்தமிட்டு பஸ் நிற்கிறது. தலையில் இரத்தம், வண்டியில் வந்த டேனி அதிர்ந்தான் ஓடினான். அவளை துக்கி வண்டியில் அடைத்தான். அருகில் இருந்த கிறிஸ்தவ மருத்துவ மனையில் சேர்த்தான். எப்படி உங்களுக்கு இந்த துணிச்சல் வந்தது? டேனி கேட்டான்.
ஏங்க முழு உலகத்தையும் மீட்க கடைசி சொட்டு இரத்தம் வரை சிலுவையில் சிந்தியவர் என் இயேசு.
அவர் பிள்ளை நான். ஏதும் அறியாத ஒரு பிஞ்சு பிள்ளையின் உயிரை காக்க இரத்தம் சிந்தினால் என்ன? சர்லேட் சொன்னாள்.
தேடியவள் கிடைத்தால். பெற்றோரிடம் ஓடினான். ஒரு பொழுது காலம் முடியும் வரை பெற்றோர் காத்திருந்தனர். டேனி சார்லெட் திருமணம் முடிந்தது.
முற்றும்
மறக்காமல் கருத்துக்களை இடுங்கள்.
WORD OF GOD
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் . திரு வசனங்கள்: சங்கீதம்.112 ...
-
வேத வினா விடை போட்டி இம்முறை வேத விடுகதை போட்டியாக வருகிறது. இந்த முறை வேதவினா போட்டியை வேத விடுகதை முறையில் நமக்கு தொகுத்துக் கொடுத்தவர் எ...
உங்கள் இதயம் தொட்டவை
-
Text : ஏசாயா.60:20b கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம். ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போது...
-
Hi kutties today we will learn the second lesson from the New Testament. Read and share it to your friends. One day the king's messeng...
-
மல்கியா.4 :2 (மலாக்கி.4 :2 ) என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் ...
Dear Yessaiyan Appa,
ReplyDeleteI Read your story.Very nice thought here in this story.Especially must read to Parents for this story.