விசுவாச அன்பர்களுக்கு அதிகாலை ஸ்தோத்திரங்கள் . இன்றைய காலை நேர தியான வசனம், நீதிமொழிகள்.8 :௦ 17௦..
" அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள். "
காலை என்பது எப்போதுமே இனிமையான பொழுதுதான் , காரணம் ஒவ்வொரு நாள் காலையும் இறைவனின் மகிமையால் தான் கண் விழிக்கிறோம். அநேகர் எழும்போதே அந்த நாளுக்குரிய கவலையோடு கண் விழிப்பார்கள், பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் காலையின் இனிமையை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது, சூரிய உதயத்தையும், காலை பனியையும், இள வெயிலையும் ரசிக்க முடியாமல் அந்தந்த நாளுக்குரிய கவலையில் ஓட ஆரம்பித்து விடுகிறோம்.
இந்த பாபர ஓட்டத்தின் நடுவே இறைவனை தேட நேரம் இல்லாமல், ஒரு சல்யூட் மட்டும் வைத்துவிட்டு ஓடுகிறோம். ஆனால் நீதி மொழிகள் 8 :௦17 தெளிவாக கூறுகிற அறிவுரை, அதிகாலையில் கர்த்தரை தேடுகிறவர்கள் அவரைக் கண்டடைவார்கள் என்பதே.
நேரம் பார்த்து கடவுளை தேடவேண்டிய அவசியம் இல்லைதான், நேரம் பார்த்து அவர் நன்மை செய்பவரும் அல்ல, ஆனாலும் காலையின் இனிமையில், அவரோடு ஒரு 15 நிமிடம் செலவிட்டு ஒரு ஜெபம் ஒரு சின்ன தியானத்தோடு ஒரு நாளை துவங்கினால் அது எப்படி , இருக்கும், அந்த நாள் முழுதும் ஒரு சமாதானம் நம்மை ஆட்கொள்ளுமே அதுதான் இறைவன் நம்மோடு பயனிப்பதல்லவா? ஒரு நாள் முழுதும் அவர் நம் பக்கத்தில் இருப்பதை உணர முடியும் அல்லவா?
அதைதான் நீதிமொழிகள் அறிவுறுத்துகிறது, காரணம் தாவீது தன் நாளை துவங்கும்போதெல்லாம் ஜெபத்தோடு துவங்கினவர். (சங்கீதம்.55 :17 ) அதுதான் தன் வாழ்வுக்கு பலமாக அமைந்தது என்கிறார், என் எதிரிகளை ஜெபத்தின் பலத்தால் தான் மேற்கொண்டேன் என்கிறார்.
இந்த ரகசியம் தெரிந்தவர் தான் சாலமன். எனவே தான் அவரும் அதையே தன் அறிவுரையாக நமக்கு அளிக்கிறார். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரவு துவங்கி அதிகாலை வரை ஜெபிக்கும் வழக்கம் கொண்டவரல்லவா , எனவேதான் தான் அவரும் தன் சீடர்களை ஜெபிக்க சொல்லி அறிவுறுத்தினார், ஜெபிக்க கற்றும் கொடுத்தார்.
நம்மை இந்த காலைவேளையில் சில நிமிடங்கள் இறைவனிடம் அர்ப்பணிப்போம். இந்த வசனத்தின் வழியாக நம்முடைய உள்ளத்தின் வேண்டுதல்களை அவரிடம் சமர்ப்பிப்போம். இந்த காலை வேளையை அவரோடு துவங்குவோம் நம் எதிர்ப்புகளை வேரறுக்க பலன் பெறுவோம்.
கடவுள் இந்த நாள் முழுதும் நமக்கு துணை நிற்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
No comments:
Post a Comment