WORD OF GOD

WORD OF GOD

Tuesday, January 25, 2011

சிறுவர்களுக்கான படக் கதை

ஹலோ குட்டீஸ் இந்த காலை  உங்களுக்கான  காலை..........

அன்பான  சிறு பிள்ளைகளே உங்களுக்கான படக்கதை ஒன்றை அறிமுகப்படுத்துகின்றேன் உங்களுடைய கருத்துகளை தவறாமல் பதிவிடுங்கள்.

யோவான் 6 : 1 - 13 

அன்பான சிறுவர்  சிறுமியரே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருநாள் திபேரியா எனப்பட்ட கலிலேயா கடலின் அக்கறைக்கு போனார்.


 அதை கேள்விப்பட்ட அனேக ஜனங்கள் அவரை பார்க்கவும் அவருடைய வார்த்தைகளை கேட்கவும் அவரை நெருங்கி வந்துவிட்டனர்.



திரளான மக்கள் வருகிறதை பார்த்த நம்முடைய ஆண்டவர் ஒரு மலையின் மீது சீடர்களோடு ஏறி உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்.


உபதேசத்தை கேட்ட மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் ஆசை  பட்டார். எனவே இயேசு சாமி தன் சீடர்களை கூப்பிட்டு இவர்களுக்கு கொடுக்க அப்பங்கள் எங்கே கிடைக்கும் என்று பிலிப்புவிடம் கேட்டார்.


அதற்கு பிலிப்பு இவ்வளவு பேருக்கு உணவு கொடுக்க ஒருவருட சம்பளம் இருந்தாலும் போதாதே  என்றார். அப்பொழுது அந்திரேயா என்ற சீடர்   ஒரு சிறுவனிடம்  , ஐந்து  அப்பமும்,  இரண்டு  மீனும் இருக்கிறது என்றார்.


உடனே இயேசு கிறிஸ்து அனைவரையும் உட்கார வைக்க சொன்னார், அந்த இடம் அழகான புல்  தரையாக இருந்ததால், அனைவரும் மிக வசதியாக அமர்ந்தனர். உட்கார்ந்தவர்களில் ஆண்கள் மட்டுமே ஐயாயிரம் பேர் இருந்தனர்.


இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, சீடர்களிடத்தில் கொடுத்தார்,




சீடர்கள் அதை வாங்கி புல்  தரையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு பரிமாற துவங்கினர், ஆச்சரியம் அந்த ஐந்து அப்பமும் இரண்டு மீனும் குறையாமல் பெருகிக்கொண்டே வந்தது..  




எல்லாரும் சாப்பிட்டு மிகவும் திருப்தியானார்கள். அதற்கு பிறகு இயேசு, மீதியானவைகளை வீணாய் போகாதபடி எடுத்து வைக்கக் சொன்னார். அப்படியே  அவர்கள் மீதியானவைகளை, சேகரித்தனர், அவைகள் 12 கூடை கிடைத்தது.



இந்த அற்புதத்தை கண்ட மக்கள் இயேசுவை மெய்யாகவே தீர்க்கதரிசி என்றார்கள், அவரை ராஜாவாக்க வேண்டும் என்று ஆசைபட்டார்கள்.

அன்பான சிறு பிள்ளைகளே இவ்வளவு பெரிய அற்புதம் எப்படி நடந்தது? அந்த சின்ன பையன் கொடுத்த ஐந்து அப்பம் இரண்டு மீனால் தானே நடந்தது, தான் சாப்பிட வைத்திருந்ததை, தனக்கென்று வைத்துக்கொள்ளாமல், அடுத்தவர்களுக்காக இயேசுவினிடம் கொடுத்தான் அதை அவர் பல மடங்கு பெருக்கி அனைவருக்கும் கொடுத்தார். எனவே கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் நன்மைகளையும், திறமைகளையும் அவரிடம் கொடுத்தால் அவர் அதை பல மடங்கு   பெருக்கி அனைவருக்கும் பயன்படும்  வகையில் ஆசீர்வதிப்பார்.

இன்னொரு படக்கதையில் விரைவில் உங்களை சந்திக்கிறேன் அதுவரை கதையை படித்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள் ஒகே வா.

இப்படிக்கு உங்கள்
கில்பர்ட் அங்கிள்.



No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews