அன்பான தள நண்பர்களே இந்த காலையில் உங்கள் யாவருக்கும் எனது ஸ்தோத்திரங்கள். இந்த இனிமையான பொழுதில் நாம் தியானத்திர்க்கென்று எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை மத்தேயு 4 :23"பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்".
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி பட்டவர் என்பதை மிக தெளிவாக சொல்லுகிற வசனம் தான் இன்றைக்குறிய நம்முடைய தியானப் பகுதி.
நம்முடைய ஆண்டவர் ஊழியத்தை துவங்குகிற காலம் வந்தவுடனே அவர் புறப்பட்டு போனது கலிலேயாவை நோக்கி, (மத்.4 :13 )
கலிலேயா என்பது புற ஜாதிகள் அதிகமாக வாழ்கிற பகுதி, அது மாத்திரமல்ல ஏழைகளும் பாமரர்களும் வாழ்கிற பகுதி, அந்த இடத்தில் ஆண்டவர் தன் ஊழியத்தை முதன் முதலாக துவங்குகிறார்.
எருசலேமில் அவர் தன் ஊழியத்தை துவங்கியிருந்தால், ஒரே நாளில் அவர் மிகவும் பிரபலமாகியிருப்பார், காரணம் எருசலேம் தான் யூதர்களின் தலை நகரம். அதுமாத்திரமல்ல படித்தவர்களும், அரசாங்க அதிகாரிகளும் , மதத் தலைவர்களும், வாழ்கிற பகுதி எப்போதும் மக்கள் நடமாடிகொண்டிருக்கும் புனித தலம் அங்கே ஆண்டவர் ஒரு அற்புதத்தை செய்திருந்தால் ஒரே நாளில் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்ற தீர்க்க தரிசியாக மாறியிருப்பார்.
ஆனால் ஆண்டவரோ அதை விரும்பவில்லை காரணம் இயேசு கிறிஸ்து தன்னை பிரபலமாகி கொள்ள வந்தவரல்ல, மக்களுக்கு நன்மை செய்வதற்காக புறப்பட்டு வந்தவர், எனவே தான் துனபத்தின் நடுவில் வாழ்கிற கலிலேயர்களை தேடி போனார், மரண இருளில் வாழ்ந்துக்கொண்டிருந்த ஜனங்களை தேடி போனார்.
அவர் இன்றும் துன்பத்தில் இருக்கிற ஜனத்தின் பிரதிநிதியாகவே பிதாவின் வலது புறம் நின்று பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் எனவே நம் துன்பங்களை நீக்கும் கிறிஸ்து நம்மோடிருக்கிறார் என்ற மகிழ்ச்சியோடு இந்த நாளை துவங்குவோம் ஆமென்.
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்
No comments:
Post a Comment