அன்பான உடன் விசுவாசிகளே இந்த பரிசுத்தமான ஒய்வு நாளில் மனிதன் எங்கே போகிறான் என்ற தலைப்பில் உங்களோடு இறை வார்த்தையை பகிர்ந்து கொள்ளுகிறேன்.
ஏசாயா. 49 : 6 ல் கடவுளின் தாசனாகிய, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பு பற்றி ஏசாயா தீர்க்கரின்வழியாக கடவுள் முன்னரிவிக்கிறதை காண்கிறோம். மிக தெளிவான முறையில் கடவுள் ஏன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்பினார் என்பதை இந்த ஒரு வசனத்தில் நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது.
அதாவது இயேசு கிறிஸ்து இந்த உலகில் வந்ததின் நோக்கம் வெறும் இஸ்ரவேலர்களல்ல, அப்படி வந்திருந்தால் கடவுளுக்கு அற்பம் என்கிறார் அதாவது வெறும் இஸ்ரவேலர்களுக்காக கிறிஸ்து வந்திருந்தால் கடவுளுக்கு அது கேவலம் என்கிறார் காரணம் கடவுள் பட்சபாதம் உள்ளவர் அல்ல.'' யாகோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் என் தாசனாயிருப்பது அற்ப காரியமாயிருக்கிறது, நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்ச்சிப்பாயிருகும்படி, ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார் ''
யோவான் 1 :29 ன் படி அவர் முழு உலகின் பாவங்களையும் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எல்லா மனிதனுக்காகவும் தன்னையே ஒப்புக்கொடுக்க வந்தவர்.
ஆனால் அவரை பின்பற்றுகிற நாமோ சுயநலம் உள்ளவர்களாய் இருக்கிறோம். நம்மை விட கோணலும் மாறுபாடும் உள்ள இந்த உலகம் முழு சுய நல உலகாய் மாறி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் இருக்கிற இடத்தில் புகைப்பிடிக்கிற கொடூரர்கள், சாலையை கடக்க நினைத்த ஒருவரை இடித்துவிட்டு நிறுத்தாமல் போகும் உயிர்க் கொல்லிகள், ஓட்டுப்போட்ட மக்களையே சுரண்டும் சில திருட்டு அரசியல்வியாதிகள் என நம்மை சுற்றி இந்த உலகே சுயநலக் காடாய் மாறிவருகிறது ஆனால் நமது ஆண்டவரோ அடுத்தவனுடைய வாழ்வுக்காக தன்னை இழந்தவர்.
அவர் வழி வாழ நாமும் முனைவதே உண்மையான இரட்ச்சிக்கப்பட்டவர்களின் அடையாளம்.
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
No comments:
Post a Comment