சங்கீதம்.27 :1
"கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமுமானவர் யாருக்கு பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்".
அன்புள்ள உடன் விசுவாசிகளே அதிகாலை அன்பின் ஸ்தோத்திரங்கள்.
பயம் என்பது மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று.
பொதுவாக இருள் நமக்கு ஒரு இனம் புரியாத பயத்தை உண்டாக்குகிறது,
பாவம் நமக்குள் கடுமையான பயத்தை உண்டாக்கி குற்ற உணர்வில் செயல்பட முடியாதபடி கட்டுபடுத்திவிடுகிறது. எனவே வேதம் பாவத்தை வெறும் பாவம் என்று சொல்லாமல் பாவ இருள் என்று கூறுகிறது, இருளை விட பல மடங்கு பயத்தை உண்டாக்குகிறது.
மேலும் , தினந்தோறும் நாம் பயந்து பயந்து வாழ்வது ஜீவனுக்காக, நம் உயிரை, நம் பிள்ளைகளின் உயிரை பாதுகாக்க போராடுகிறோம். எனவே உயிருக்கும் உடலுக்கும் ஆரோக்யத்துக்கும் தீங்கு உண்டாக்குகிற எதையும் சுத்தமாக நம்மை விட்டு விலக்கி
ஜீவனை நிறைவாய் காத்துக்கொள்ள முயலுகிறோம் .
ஆனால் தாவீதோ எனக்கு இருளை பற்றியோ ஜீவனை பற்றியோ பயம் இல்லை என்கிறார். அதற்கான காரணத்தையும் தெளிவாக முன்வைக்கிறார். கர்த்தர் என் வெளிச்சம் என்கிறார். ஆம் அவர் உலகின் ஒளியான கிறிஸ்து அல்லவா? பாவத்தின் கொடூர இருளில் இருந்து நம்மை மீட்டவர் அல்லவா?, பாதாளத்தின் வாசலில் இருந்த நம்மை பரலோக பாதைக்கு திருப்பினவர் அல்லவா? அவரை உண்மையாய் பற்றிக்கொண்ட யாவருக்கும் அவர் உண்மையுள்ளவராய் இருந்து நம்முடைய எல்லா பயத்திலிருந்து நம்மை மீட்டு இரட்ச்சிப்பவர் அல்லவா?
அது மாத்திரமல்ல இந்த ஜீவனின் உத்தரவாதம் இல்லாத உலகத்தில் நம் ஜீவனுக்கு அரணாக இருப்பவர் அவரே. எனவே அவரை நம்பினோர் யாதொரு தீவினைக்கும் பயப்பட வேண்டியதில்லையே.
எனவே ஜீவனின் பெலனும் வாழ்வின் ஒளியுமான கிறிஸ்துவில் சந்தோஷமாய் இந்த நாளை துவங்குவோம் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
No comments:
Post a Comment