கிறிஸ்துவுக்குள் இனிமையாய் நேசிக்கப்பட்ட எனது அன்பிற்குரிய உடன் விசுவாசிகளே, என் நெஞ்சில் நிறைந்த என் வாசக நண்பர்களே. உங்களுக்கு இந்த காலை வேளையில் கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற நாமத்தில் ஸ்தோத்திரங்கள். நமது ஜெபத்தை கர்த்தர் கேட்டருளினார். இன்று நாம் எதிர்பார்த்தப்படி சிறுவர் ஊழியத்தை துவங்க தேவன் எல்லா கதவுகளையும் விசாலமாய் திறந்துவிட்டார். இன்று காலை 10 மணிக்கு கருணை இல்லம் என்ற அநாதை மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் நமது முதல் சிறுவர் ஊழியத்தை துவங்கபோகிறோம்.
இந்த ஊழியம் சிறப்பாக நடக்கவும், தொடர்ந்து தடையின்றி இந்தியா முழுவதும் வளரவும். இதன் தேவைகள் சந்திக்கப்படவும், சிறுவர்கள் மத்தியில் இதன் மூலமாய் பெரிய எழுப்புதல் உண்டாகவும், தேவ பக்தியுள்ள தலைமுறை உருவாகி தேசத்தின் பிரச்சனைகள் தீரவும் தொடர்ந்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment