நாம் மட்டுமல்ல கடவுள் கூட தன்னை சிங்கத்தோடு ஒப்பிட்டு பேசுவதைத்தான் இன்றைக்குரிய தியானப்பகுதியில் நாம் காண்கிறோம். கடவுளை நம்பி விசுவாசத்தோடு வாழ்கிறவர்களை கடவுள் எப்படி பாதுகாப்பார் என்பதை சிங்கத்தை உதாரணமாக கொண்டு கடவுள் விளக்குகிறார். அதாவது அக்காலங்களில், மேய்ப்பர்கள், தங்கள் ஆடுகளை காடுகளில் மேய்க்கும்போது, கொடிய விலங்குகள், எப்போது வேண்டுமானாலும் வந்து ஆடுகளில் ஒன்றை கவ்விக்கொண்டு ஓடிவிடும். சிங்கம் வந்து கவ்விக்கொண்டு ஓடினால் என்ன நடக்கும் என்பதைதான் இந்த வசனத்தில் கடவுள் விளக்குகிறார்.
சிங்கம் கவ்விக்கொண்டிருக்கும் போது உறுமி, கத்துகிற மேய்ப்பர்களின் இரைச்சலை கண்டு கலங்காமல், அவர்கள் ஆயுதங்களுக்கு பணியாமல் துணிச்சலாய் நிற்குமாம். அதைப்போல கர்த்தர் இஸ்ரவேலை காக்க இறங்குவார் என்று கடவுளே ஏசாயா தீர்க்கரின் வழியாக கூறுகிறார்.
ஆம் பிரியமானவர்களே நம் கடவுள் நம்மை பாதுகாக்க நமக்காக இறங்குகிறவர். சிங்கத்தை போல இறங்குவார். நமக்கும், நம் பாதுகாப்புக்கும், நம் வாழ்வுக்கும் தடையாக இருக்கிற சக்திகள் எவ்வளவு கொடூரமாய் நம்மை எதிர்த்தாலும், அசராமல் நிற்கும் சிங்கத்தை போல நின்று நம்மை காத்திடுவார். அதனால் தானே நம் ஆண்டவரை நாம் யூத ராஜ சிங்கம் என்று அழைக்கிறோம்.
தைரியமாய், விசுவாசத்தோடு உலகில் வாழ்வோம், கர்த்தர் நம்மை காத்திடுவார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment