WORD OF GOD

WORD OF GOD

Thursday, June 16, 2011

இயேசு கடவுளா?

அன்பான உடன் விசுவாசிகளே.. கடந்த திங்கட் கிழமை  ஒரு ஈமெயில் தகவல் வந்தது அதில் திரு R .பிரபு என்பவர் ஒரு நல்ல கேள்வியை கேட்டிருக்கிறார் அதற்கு தற்போது பதிலளிக்க விரும்புகிறேன், அவரது கேள்வியை இங்கே அப்படியே ஒட்டியுள்ளேன்.


Hi gilbert,

Praise the lord,
I have visited your web site tonight,
I read the article called Pentecostal day,
In that second paragraph, you asked the question called,

Whose lord Jesus Christ?

You explained not clear?  you used the word called kadavul
Can you give me the example where it’s written kadavul in bible?
Where is in the bible book?

Thanks & regards,
Prabu, R

அன்பு சகோதரர் பிரபு அவர்களே உங்கள் கேள்வி எனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது, காரணம் இந்த தளம் மூலம் கடவுளின் நாமம் பரவுவதை கண்டு அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். தற்போது நேரடியாக உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன். நிச்சயமாக வேதாகமத்தில் இயேசு கடவுள் என்று நாம் எதிர்பார்க்கும் விதத்தில்  குறிப்பிடப்படவில்லை. ஆனால் கடவுள் யார் என்று குறிப்பிடுகிறது, அவரை பிதா என்று வேதாகமம் நமக்கு காண்பிக்கிறது. இயேசுவை மேசியா என்று தீர்க்கர்கள் அடையாளம் காட்டினர். இயேசுவோ தன்னை மனுஷ குமாரன் என்று அடையாள படுத்துகிறார். அதே நேரத்தில் சீடர்கள் அவரை தேவ குமாரன் என்றதை அப்படியே ஒப்புக் கொண்டார். மத்தேயு.16 :15 , 16 .  இப்போது அவரை பற்றி மூன்றுவிதமான தகவல் கிடைக்கிறது. 1 . மேசியா, 2 .மனுஷகுமாரன், 3 . தேவகுமாரன். இதில் எது சரி என்றால் இந்த மூன்றும் சரிதான், காரணம், முதலில் உள்ளது கடவுள் முன்னறிவித்தது, இரண்டாவது ஆண்டவரே சொன்னது, மூன்றாவது சீடர்கள் சொல்லி  இயேசுவால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த மூன்றும் உங்கள் கேள்வியை மேலும் உறுதிப்படுத்துகிறது, காரணம் இந்த மூன்றுமே கடவுளுக்கு இணையான வார்த்தைகள் அல்ல. கடவுளுக்கு அடுத்த நிலையில் தான் இயேசுவை காண்பிக்கிறது. ஆனால்.... யோவான்.10 :30  ல் இயேசு தன்னை பற்றி சொல்லுகிற விஷயம் யூதர்களை மூர்க்கமடைய  வைத்து அவரை கல்லெறியுமளவுக்கு கொண்டு போனது. அந்த விஷயம் நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்பதே. இதன் அர்த்தம் என்ன நான் பிதாவுக்கு சமமானவன் என்று அவரே தன்னை வெளிப்படுத்துகிறார்.

இதையும் கடந்து ஆண்டவர் பிலிப்புவுக்கு சொன்ன பதிலில் அடங்கியுள்ளது. அதே யோவான் சுவிசேஷம் 14  ம் அதிகாரம் 8  ம் வசனத்தில் பிலிப்பு கேட்கிற கேள்வி ஆண்டவரே பிதாவை எங்களுக்கு காண்பியும் என்றார், அதற்கு 9  ம் வசனத்தில் இயேசு கூறிய பதில் இவ்வளவு காலம் என்னோடிருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னை   கண்டவன் பிதாவை கண்டான்: அப்படியிருக்க பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய் என்று கேட்கிறாரே இதன் அர்த்தம் என்ன? நான்தான் பிதா இது கூடவா உன்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றுதானே கேட்கிறார்?

இதில் ஒரு குழப்பம் உண்டு  அப்போது கூட கடவுள் என்று சொல்லாமல் பிதா என்கிறாரே என்று கேட்கலாம், அன்பான சகோதரரே பிதா என்பது யூதர்கள் கடவுளை குறிக்க பயன்படுத்தும் பொதுவான வார்த்தை. காரணம் எபிரேய  மொழியில் கடவுளின் பெயர் யாவே என்பதாகும் அதை தங்கள் பாவமுள்ள நாவினால் உச்சரிக்க அவர்கள் அஞ்சியதால் கடவுளை ஆண்டவரென்றும் பிதா என்றும் அழைத்தனர்.

இயேசு கடவுள் இல்லை என்றால் அவரால் எப்படி நம்மை இரட்சிக்கவும், காக்கவும் முடியும்? உலகின் பெரும்பானமையான மக்கள் இந்த ரட்சிப்பைதானே இயேசுவில் அனுபவித்து வருகின்றனர்.  

உங்கள் அன்பார்ந்த கேள்விக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து உங்கள் நல் ஆதரவை தாருங்கள்.

நன்றியுடன்

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews