WORD OF GOD

WORD OF GOD

Saturday, June 25, 2011

சமாதானத்தின் கடவுள். ( காலை மன்னா )

சங்கீதம்.147 :14 

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்

நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள். ஜூன் மாதம் நம் அனைவருக்கும் பிஸி மாதம். கல்வியாண்டு துவங்குவதால் பெற்றோர்கள், பிள்ளைகள் அனைவரும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிற காலம்.

இந்த மாதத்தில் இயேசு ஆண்டவர் நமக்கு கூறுகிற வாக்குத்தத்தம், எதை குறித்தும் கவலைப்படாதே, உன் எல்லைகளில் கண்டிப்பாக சமாதானம் பெருகும், நீ சகலத்திலும் திருப்தியாவாய், பதட்டம், பயம், தேவைகள், குறித்து நீ எதற்கும் பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன், என்று ஆண்டவர் கூறுகிறார். நம்முடைய எல்லா தேவைகளும் கடவுளுக்கு முன்பாக கொண்டுவரவேண்டும். பிலி:4 :17 , சங்.23 :5  ஆகிய வசனங்களில், சமாதானத்தின் ஆசீர்வாதங்களை தருகிறார். மேலும் சில திரு வசனங்களை காண்போம்.

ஏசாயா.54 :10 
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

கொலோ.3 :15 
 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.

ரோமர்.16 :20 
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

யாக்.5 :10 -11  11. இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் ருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
10. என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசி தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.


நம்முடைய தந்தையான  கடவுள் மனதுருக்கம் உடையவர். அவர் மிகுந்த பொறுமையுள்ளவர். எனவே நாமும், பாடுகள் துன்பங்கள் வரும்போது, பொறுமையோடு சகித்து, ஆண்டவர் தருகிற ஆசீர்வதங்களைப் பெற்றுக் கொள்வோம். அவர் நம்முடைய எல்லைகளை சமாதானத்திலும், தானியத்தாலும் நிறைத்து பாதுகாப்பார். ஆண்டவர் இந்த நாளை ஆசீர்வதித்து தருவாராக ஆமென்.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews