கிறிஸ்துவுக்குள் எனதன்பான சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் இந்த காலைவேளையில் எனது அன்பான ஸ்தோத்திரங்கள், இன்று நாம் தியானிப்பதற்காக எடுத்துக்கொண்ட தியான வசனம். மத்தேயு.6 :31 - 32
31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.
32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
அன்பான உடன் விசுவாசிகளே எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறவர்களை பார்த்திருக்கிறீர்களா? கைஸ் ராயேஸ் என்பவர் தன் அனுபவத்தை பற்றி சொல்லுகிற் ஒரு செய்தி மிகவும் சுவாரஸ்யமானது,
அவருக்கும் அவர் மனைவிக்கும் முதல் குழந்தை பிறந்த பிறகு அவர்கள் வாழ்க்கை தலை கீழாக மாறிப்போனதாம். இரவில் குழந்தையை பார்த்துக்கொள்வது மிகவும் சிரமம், அதுவல்லாமல் அவர்கள் குழந்தை தினமும் இரவில் அழுதுக்கொண்டே இருக்குமாம், அழுகுரல் கேட்ட உடனே அவர் மனைவி, என்னங்க என்னங்க, குழந்தை அழுது என்னவென்று பாருங்க என்று எழுப்பிவிடுவாராம், இவர் எழுந்துப்போய் குழந்தையை தூங்கவைக்க படாத பாடுப்பட்டு, தூங்க வைப்பாராம்.
இது ஒரு நாள் இரண்டு நாளல்ல தினமும் நடந்துக்கொண்டிருந்ததாம், இதனால் அவருக்கு சரியான தூக்கம் இல்லாமல், தினந்தோறும் அலுவலகத்தில், சரியாக பணிபுரியாமல் அவஸ்தைப்பட்டாராம். இவர் மீது அன்புக்கொண்ட இவரது அலுவலக நண்பர்கள் இதை பற்றி விசாரித்தபோது தன் பிரச்சனையை சொல்லியுள்ளார், உடனே அவரது நண்பர்கள் இன்பான்ட் மெசேஜஸ் என்ற புத்தகத்தை வாங்கி படிக்க சொல்லியுள்ளனர்,
அவர் வாங்கி குழந்தையை துங்கவைக்க என்னசெய்ய வேண்டும் என்பதை படித்தார், அதில் குழந்தையின் முதுகு, தோள்கள், தலை, கால்கள் ஆகியவற்றை மிகவும் லாவகமாக மசாஜ் செய்ய வேண்டும் என்றிருந்தது, உடனே அன்றிரவே அதன்படி செய்தார், அன்றிரவு பிள்ளை அமைதியாக தூங்கிகொண்டிருன்தது..
ஆனால் திடீரென அவர் மனைவி என்னங்க என்னங்க என்று மிகவும் பதட்டமாக, அவரை எழுப்பினாராம், அவர் பதறிப்போய் எழுந்து ஏன் என்ன ஆச்சு என்று கேட்டால், அவர் மனைவி சொன்னாராம், என்னங்க குழந்தை அழவே இல்ல கொஞ்சம் எழுந்து என்னனு பாருங்க என்றாராம்..
இப்படிப்பட்ட மனிதர்களை கேள்விபட்டதுண்டா? தேவை இல்லாமல் பயப்பட்டு அனேக காரியங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், காரியங்கள் நல்லபடியாக நடந்துக்கொண்டிருந்தாலும் கவலைப்படுபவர்கள்.
அவர்களுக்குதான் ஆண்டவர் இங்கே மிக ஆசீர்வாதமான செய்தியை கூறுகிறார். எதை உண்போம், எதை குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலை படாதீர்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு தேவை என்பது
கடவுளுக்கு தெரியும் என்கிறார், காரணம் நம் தேவைகள் தெரியாதவரா நம் கடவுள், நம்மை முழுவதுமாய் அறிந்த தேவனுக்கு நம் கவலைகள் தெரியாதா?
எனவே முதலாவது அவரையும், அவரது வாழ்வையும் பின்பற்றுவதில் உற்சாகமாய் தரித்திருந்தால் போதும். நம் தேவைகளை நம் தேவன் பார்த்துக்கொள்வார், நமக்காக ஜீவனை கொடுத்தவர் நம் தேவைகளை தரமாட்டாரா?
இந்தக் காலையில் இந்த சந்தோஷத்தின் செய்தியோடு நம் பணிகளை தொடருவோம்.. பரிசுத்தாவியானவர் நம்மை காத்துக்கொள்வார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment