ஜெயம் கொடுக்கும் இறைவன்
1 கொரிந்தியர் .15 :57
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்
மனித முயற்சிகள் வெற்றி தருவது போல தோன்றும் ஆனால், வெற்றி பெற முடிவதில்லை, இயேசுவின் அருளும் ஆற்றலுமே நம்மை வெற்றிப்பெற செய்கிறது.
இங்கு தியான பகுதியில், பவுல் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் மூலம் நமக்கு ஜெயம் கொடுக்கிற கடவுளுக்கு ஸ்தோத்திரம் என்று கூறுகிறார்,
இந்த வருடம் தேர்வு எழுதப்போகிற மாணவர்களுக்கு, தொழில் செய்வோருக்கு, வாழ்வில் இன்னும் அனைத்திலும் வெற்றி தருகிறார் ஆண்டவர். குறிப்பாக சோதனைகள் வேதனைகள், துன்பங்கள், துயரங்கள் எல்லாவற்றிலுமிருந்தும் நம்மை இரட்சித்து வெற்றி அருளுகிறார்.
தாவீது அரசன் வாழ்வில், அவர் சிறுவனாக ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தபோது, பெலிஸ்திய படை வீரனான, கோலியாத்தை, முறியடித்தார். கோலியாத் பெரிய பலசாலி அதிக வலிமையுடையவன், ஆனால் தாவீது பொடியன். இஸ்ரவேல் இராணுவமே அவனிடம் சண்டையிட பயந்துப்போய் இருக்கிற நேரத்தில், தாவீது நான் போகிறேன் என்று வருகிறான்.
கோலியாத் தன் சுய பலத்தை நம்பி, பட்டயத்தை நம்பி இருக்கிறான், தாவீது சொல்லுகிறான், நான் என் சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய நாமத்தில் வருகிறேன் என்று சற்றும் பயப்படாமல் வந்து தோற்கடித்தான். கடவுளின் வல்லமையை நம்மால் அறிய முடியாது. அவருடைய சத்தம், பெரிய நீர்வீழ்ச்சியின் இரைச்சலை போல் உள்ளது, இடி மின்னல் போல் உள்ளது.
சங்கீதம் . 44 :6 , சங்கீதக்காரன் கூறுகிறான் , நான், என் வில்லை நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. ஆண்டவருடைய பிள்ளைகளே, ஆண்டவரே நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் நமக்கு வெற்றியைத் தருகிறார், ஏன் என்றால் நமது ஆண்டவர் இயேசு ஜெய வீரர், ஜெயகிறிஸ்து, யாரும் வெல்லமுடியாத மரணம், சாபம், பாவம், சாத்தானை சிலுவையில் வென்றவர் அவர்.
இன்று நம்மை பார்த்து சொல்லுகிறார் கவலைப்படாதிருங்கள், நான் உங்களுக்கு எல்லா நிலைகளிலும் வெற்றியை தருவேன், இனி தோல்வியே கிடையாது அனைத்திலும் வெற்றிதான்.
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவார் ஆண்டவர். சமாதானமாய் இந்த நாளை ஆரம்பியுங்கள், ஜெய வீரர் இயேசு உங்களுக்கு வெற்றி அருளுவாராக.
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு
thanks for all the cooments, please everyone put comment on this site, tell the world to how much this website usefull for you.
ReplyDeletethanks for all
Rev.Gilbert