அன்பான உடன் விசுவாசிகளே காலை நேர ஸ்தோத்திரங்கள். இன்றைய தியானப்பகுதி அப்போஸ்தலர்.9 :5
அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நம்முடைய ஆண்டவர் நம் மீது அளவற்ற அன்புக் கொண்டவர், நம்மை பாதுகாப்பதில் பரிபூரண ஈடுபாடு கொண்டவர், அதற்கு சரியான உதாரணம் தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.
சவுல் என்பவன் கிறிஸ்தவர்களை கொல்லும் அதிகாரத்தை பெற்றுக்கொண்டு, தமஸ்குவை நோக்கி கொலை வெறியோடு புறப்படுகிறான், போகிற வழியில், திடீரென அவனை சுற்றி ஒரு ஒளி பிரகாசிக்கிறது, அவன் தரையில் விழுகிறான், அப்பொழுது சவுலே சவுலே என்று கூப்பிடுகிற ஒரு சப்தத்தை அவன் கேட்கிறான், அதற்கு அவன், நீர் யார் என்று கேட்கிறான்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம் என்கிற பதில் கிடைக்கிறது.
அன்று முதல் அவன் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டது, கிறிஸ்தவர்களை கொல்ல புறப்பட்டவன், கிறிஸ்துவுக்காய் ஜீவனை கொடுக்க ஆயத்தமானான்.
எப்படி நடந்தது இந்த மாற்றம், நம் ஆண்டவர் இயேசுவினால் நிகழ்ந்தது, நமக்கு எதிராக எழும்புகிற ஆயுதம் வைக்காதே போகும் என்ற ஆண்டவரின் வார்த்தையை நிரூபித்துக்காட்டினார் , மாத்திரமல்ல நம்மை துன்பப்படுத்தினால், அது முள்ளை உதைக்கிரதற்கு சமம் என்கிறார்,
இதன் மூலம் அவர் நம்மை பார்த்துக்கொள்வதில் எவ்வளவு அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பது மிகத்தெளிவாக விளங்குகிறதல்லவா?
இந்த நாளிலேயும், தைரியமாய், மனமகிழ்ச்சியாய் நம் பணிகளை துவங்குவோம், நமக்கு எதிரான வலைகளை நம் ஆண்டவர் அருத்தெரிவார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு
No comments:
Post a Comment