WORD OF GOD

WORD OF GOD

Saturday, February 19, 2011

அறிவோம் ஆரோக்கியம்

வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள் பல வகைப்படும் அதில் non steroidal anti inflammatory drugs என்பது ஒரு வகை, இதில் முதன்மையானதும பலரும் பயன்படுத்துவதுமான டைக்ளோபினக் பற்றி பார்ப்போம்.

மருந்தின் பெயர் :

டைக்லோபினக் சோடியம் / பொட்டாஷியம்

diclofenac sodium or pttasium

குறிப்புகள்:

டைக்ளோபினக் வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைப்பதற்கும், உடலில் உள்ள பிற எரிச்சல்கள், மிதமான வலிகள் குறைப்பதற்கு பயன்படுகிறது.

இவை சோடியம், பொட்டஷியம் உப்புகளாக கிடைக்கிறது. பொட்டாஷியம் உப்புகள் எளிதில் கரைந்து, வேகமாக செயல்படுகிறது.

இந்த மாத்திரைகள் நீண்ட நேரம் பயனளிக்கவும், முழுவதுமாக பயன்படவும் அதற்கேற்ற வகையில் தயாரிக்கப்படுகின்றன. இது enteric coated முறையில் தயாரிக்கப்படுகின்றன

பயன்கள்:

எரிச்சல், வலி, மூட்டுவலி, கழுத்துவலி, சிறிய அறுவை சிகிச்சைகளினால், உண்டாகும் வலி, பல் வலி, சதைப்பிடிப்பு மற்றும் தசை வலிகள், அடிமுதுகு வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் குறைய பயன்படுத்தப்படுகிறது.

அளவு:

பெரியவர்கள்: 50  mg  2 வேளை . வலியின்  வீரியம்  பொறுத்து 3  வேளை  உட்கொள்ளலாம்.

குழந்தைகள்:

1  வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்காமலிருப்பது நல்லது.
1  வயதுக்கு மேல் ஒரு கிலோ உள்ள குழந்தைக்கு , 1  முதல் 3  mg ஒரு நாளுக்கு.

மாதவிடாய் வலி: 50௦ mg  முதல்  200௦ mg  வரை ஒரு நாளில் தேவையை பொறுத்து உபயோகிக்கலாம்.

ஊசி மூலமும் செலுத்தப்படுகிறது.

பெரியவர்கள் மற்றும் மாதவிடாய் கால பெண்களுக்கு 75  mg 1  முதல் 2  முறை இடுப்பில் மட்டுமே போடவேண்டும் .

குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஊசி மூலம் செலுத்தக்கூடாது.

பக்க விளைவுகள்:

அஜீரணம் தலைவலி, வாயுக் கோளாறு (gastristic ) தலை சுற்றல், அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்புண், மற்றும் வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்படலாம். கல்லீரல், சிறு நீரகம் பாதிக்கப்படலாம். வயிற்றுப்புண் (ulcer ) உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது, தவிர்க்க முடியாத பட்சத்தில் இதனுடன் ராண்டக் (rantac  150 ) 150  mg  மாத்திரை சேர்த்து உட்கொள்வது நல்லது.

கடைகளில் கிடைக்கும் பெயர்கள்:

டைக்லோனேக் (diclonac )
டைக்லோபினக் (diclofenac )
டைக்லோரான் (dicloran)
ஜோனாக் (jonac)
ஓவிரான் (voveran)

எச்சரிக்கை:

அடிக்கடி சாப்பிடக் கூடாது

வயிற்றுப்புண் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது.

வலி வந்தாலே உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் அதற்கு அடிமையாகிவிடக் கூடும்.

ஒவ்வாமை ஏற்படலாம்.

இதயக்கோளாறு, உயர் இரத்த அழுத்தம், சிறு நீராக கோளாறு, கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடனும், முன்னேச்சரிக்கயுடனும் செயல்படுவது நல்லது.

வரும் வாரங்களில் அசெக்லோபினக் (ACECLOFENAC ) பற்றி காண்போம்.

அதுவரை உங்கள்  அன்பு சகோதரன்
சாந்தகுமார் (pharmacist)

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக் இருந்ததா கருத்துரை இடுங்கள்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews