WORD OF GOD

WORD OF GOD

Wednesday, February 23, 2011

காலை மன்னா

நம்மை விசாரிக்கிறவர்.

1  பேதுரு.5 :7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்

என் அருமை சகோதர சகோதரிகளே. இறைமகன்  இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரங்கள்.

நான் ஒருமுறை, ஆம்பூர் (வேலூர் மாவட்டம்) பகுதியில் உள்ள பெதஸ்தா லுத்தரன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  போயிருந்தேன், எப்படி உள்ளே போகவேண்டும் என்றும் யாரை விசாரிப்பதென்றும் தெரியவில்லை. மனதிலே குழப்பத்தோடு, சங்கடத்தோடு நின்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது திடீரென்று ஒரு குரல் என்னை சார், என்ன தேடுறீங்க, நான் உங்களுக்கு உதவலாமா? என்று கேட்டது.

அந்த குரலுக்கு சொந்தமானவர் அந்த  மருத்துவமனையில் பணியாற்றும் விசாரணையாளர். அவர் எனக்கு எல்லாவற்றையும் தெளிவாய் சொன்னார், எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், ஒரு தெரிந்தவர் இருக்கிறார் என்ற எண்ணமும் தோன்றியது.

நம்முடைய தியான பகுதியில் கூட இயேசு ஆண்டவர் நம்மை விசாரிக்கிறவர் என்று பேதுரு கூறுகிறார், (one  who  cares  for  you ) ஆம் நம்மை கரிசனையோடு பார்த்துக்கொள்பவர். நம்முடைய வாழ்வில் நம்மை யார் விசாரிப்பார்கள்? நம்முடைய பெற்றோர்கள், மற்றும் உடன்பிறந்தவர்கள்தனே, சில நேரங்களில் அவர்களும் நம்முடைய  தேவைகளை விசாரிப்பதில்லை.

நமக்கு தேர்வில் தோல்வி ஏற்படும்போது, விபத்து  ஏற்படும்போது, நமக்கு நெருங்கியவர்கள் மரணமடைகிறபோது அநேகர்  விசாரிப்பதில்லை. ஆனால் இயேசு ஆண்டவர் நம்மை அன்போடு, கரிசனையோடு, விசாரிக்கிறார்.

நம்மீது அவருக்கு அளவற்ற அன்பு. குழந்தை தரையில் விழுந்தால், தாயின் உள்ளம் தாங்காது, குழந்தையைவிட தாய்க்குதான் அதிகமான வலி அதேபோல் இயேசு ஆண்டவர் நம்மை கரிசனையோடு கவனிப்பதில், அதிக அக்கறையுள்ளவர்.

இன்று இயேசு ஆண்டவர் நான் உன்னை "விசாரிக்கிறேன்" கவனிக்கிறேன் என்று கூறுகிறார்.

உபாகமம்.11 :12  நீ வாழ்கிற தேசம் உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும், என்று வாக்கு கொடுக்கிறார்.

யார் நம்மை விசாரியாமல் போனாலும், கவனியாமல் போனாலும், சர்வ வல்லமையுள்ள கடவுள் நம்மை விசாரிக்கிறார், நம்மை கவனிக்கும்படியாக அவருடைய கண்கள் நம்மீது நோக்கமாயிருக்கிறது.

கவலை வேண்டாம், கண்ணீர் வேண்டாம் என்னை விசாரிக்கிறவர் இயேசு என்று தைரியமாய் இந்த நாளை நம்பிக்கையோடு துவங்குவோம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின்  பணியில்
அருள்திரு.DGW .J .மில்டன் அருண்ராஜ் BA BTh
revmilton1982@gmail.com

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews